BREAKING NEWS

ரிஷாட் பதியூதீன் மஹிந்த ராஜபக்சவின் மகன் புதுக் கதை அம்பலம்



வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
சபையில் இன்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து கருத்துக்களை வெளியிட்டார்.
அந்த செயலணிக்குள் அங்கம் வகிக்கும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அண்மைக்காலமாக வடக்கு மக்களின் நம்பிக்கையை இழந்துவந்தவர் என்பதோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களில் ஒருவராகவே கூறப்பட்டுவந்தவர்.
ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பினர் சார்பில் ஒருவரேனும் அந்தச் செயலணியில் இல்லாததினால் அதன் மீது மக்களது நம்பிக்கை வீழ்ந்துகொண்டிருப்பதால் வடமாகாண முதலமைச்சரை அச்செயலணிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சார்ள்ஸ் எம்.பி சபையில் முன்வைத்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar