ஊடகவியலாளர் ஜிஸ்மி மூஸா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களைத் தொடர்பு கொண்டு “கிழக்கின் எழுச்சி பற்றி உங்களுடைய கருத்தை இரத்தினச் சுருக்கமாக உங்களுடைய வசன நடையிலேயே கூறுங்கள்” என்று கேட்டதிற்கு ஜனாப் சுபைர்தீன் அவர்கள் புன்முறுவலோடு பின்வருமாறு கூறினார்.
“கிழக்கின் எழுச்சி - மாற்றத்திற்கான நகர்ச்சி.
மக்களின் கிளர்ச்சி – அரசியல் சக்கரத்தின் சுழற்சி.
உரிமைக் குரலின் வளர்ச்சி - உண்மை அறிந்தவர்களின் எழுச்சி.
புதுயுகத்தின் கவர்ச்சி - வடகிழக்கு இணைப்பின் வீழ்ச்சி.
போராளிகளின் புரட்சி - அரசியல் புரையோடிகளின் வீழ்ச்சி
உத்தமர்களின் புகழ்ச்சி – உலுத்தர்களின் இகழ்ச்சி.
தலைமைத்துவ தாகத்தின் முயற்சி – அந்த முயற்சி வெற்றி பெறுமாயின் அதுவே மக்களின் மகிழ்ச்சி.
அது மக்கள் மனத்திரையின் காட்சி – அதுதான் தன்மான சமூகத்தின் மனசாட்சி.”
Post a Comment