அமைச்சர் ரிசாத் பதியுதீனை பகிரங்கமாக ஆதரிப்பதற்கு களத்தில் இறங்குமாறு அழைப்பு
Posted by aljazeeralanka.com on August 09, 2016 in | Comments : 0
கடந்த பல வருடங்களாக முஸ்லிம் அரசியல் என்பது இயலாமையாகவும், சுயநலமானதாகவும், மக்களை ஏமாற்றி சொந்த வயிற்றை நிரப்புவதாகவும் இருந்த நிலைமை அ இ ம காங்கிரசின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சிறந்த சமூக அரசியல் மூலம் மாற்றமடைந்து வருவது அரசியல் அவதாணி என்ற வகையில் எனக்கு மகிழ்வை தருகிறது.
பணம், பதவிக்கு அடிமையாகாமல் இறைவனுக்காக என அரசியல் செய்யும் என்னைப்பொறுத்த வரை இதனை நான் கூறியே ஆக வேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் பல கட்சிகளின் அவசியம் தேவை என்பதில் உறுதியான நான் இதனை பல தடவை முஸ்லிம்களுக்கு குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கு சொல்லி வருகிறேன். அதனை பலரும் ஏற்காத நிலையில் இன்று அ இ ம காங்கிரஸ் மிகப்பெரிய மாற்றுக்கட்சியாய் மக்களுக்கான சேவையில் முணைப்புடன் செயற்படுவதை காண முடிகிறது.
இதன் காரணமாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் வாலில் தீ வைக்கப்பட்ட அனுமான் போல் பதறித்திரிவதை காண முடிகிறது. வாட்ட சாட்டமாய், புடவைக்கடை பொம்மையாய் வலம் வந்த அதன் தலைவர் முகத்தில் வாட்டம் தெரிகிறது.
சமூகம் அனாதையாய் புலம்பிக்கொண்டிருந்த போது வராத வாட்டம் இப்போது வந்துள்ளது.
நான் காணும் சாதாரண மக்கள் கூட அமைச்சர் ரிசாத் மீது பாரிய எதிர் பார்ப்புடன் இருப்பதை சொல்லும் போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு ஏதும் தேவை என எதிர் பார்க்கவில்லை. இந்த சமூகத்தின் தேவைகள் நிறை வேற்றப்பட வேண்டும் என்றே அவாக் கொண்டுள்ளார்கள்.
மனச்சாட்சியுள்ள எனது முஸ்லிம் காங்கிரஸ் அன்பர்கள் கூட அமைச்சர் ரிசாதை என்னிடம் பாராட்டி பேசுகிறார்கள். பலர் அபூ தாலிப் போல் மக்களுக்கு பயந்து இன்னமும் மு காவில் உள்ளதாக சொல்கின்றனர்.
ஆகவே முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக கல்முனை மக்களும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை பகிரங்கமாக ஆதரிப்பதற்கு களத்தில் இறங்குமாறு அழைப்பு விடுக்கின்றேன். நாம் எப்போதும் இயலாமை என்ற அரசியலில் ஒரு கட்சியை நம்பிக்கொண்டிருக்க முடியாது. நமது உள்ளத்தில் ஒரு முறை மாற்றம் கொண்டு வந்து நமது அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவோம்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment