மாலே பொன்ட் சர்வதேச கலாபீடத்தில் காரி றஸீன் கபூரி
Posted by aljazeeralanka.com on August 10, 2016 in | Comments : 0
மாலைதீவுக்குடியரசின் பிரிதொரு தீவான குல்புஷ் என்ற தீவுக்குடியரசில் புதிதாக இயங்கும் பொன்ட் சர்வதேச மொழி கற்பித்தல் கலாபீடத்தில் அல்குர் ஆன் பிரிவில் கிராத் தஜ்வீத் பயிற்சியாளராக இலங்கையின் பிரபல முன்னணி காரிகளில் ஒருவரான பேருவலையைச் சேர்ந்த மௌலவி காரி M.L.M.Razeen Gaffoori அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பல் வேறு நாடுகளின் கிராத் ஒலிநாடாக்களை பரிசீலித்தபின் காரி றஸீனின் கிராஅத் தெரிவு செய்யப்பட்டுள்ளது..
காரி றஸீன்; சர்வதேச குர்ஆன் போட்டிகளில் பங்கெடுத்தவர் என்பதுடன் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து இலங்கை நாட்டுக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்தவர். இலங்கை இந்திய வரலாற்றில் முதன் முறையாக அல குர் ஆன் சிடி வெளியிட்டவர்.
மலேசியாவில் ஆறுதடவை மேற்பாளராகவும் இரண்டு தடவை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டவர்.
ஈரான் இஸ்லாமிய குடியரசில் இரண்டு தடவையும், பங்களாதேஷ் இரண்டு தடவை, பாகிஸ்தான், மாலே, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடைபெற்ற அல்குர்ஆன் போட்டிகள் மற்றும் தஜ்வீத் அரங்குகளிலும் கலந்து கொண்டவர்.
- தகவல்: முபாறக் அப்துல் மஜீத்
அகில இலங்கை காரிமார் சம்மேளன தலைவராகவும், களுத்துறை மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் கடமையாற்றியவர். இவர் காலம் சென்ற முஹம்மத் ஸமீம் ஸ{லைஹா பீபி ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment