BREAKING NEWS

புலியை எலியாக்கியவர் இந்த மஹிந்த. - அஹ்மத் புர்ஹான்



இந்த புலிகளின் நரவேட்டையை இப்போதுள்ள இளம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.....அந்த புலிகள் அடக்கபடாது இருந்தால்...இன்று எத்தனையோ சுகதாக்களை அடக்கம் செய்யவேண்டி வந்திருக்கும்...
இந்த புலிகள் முஸ்லிம்களை வேட்டையாடியபோதல்லாம் சிங்கள தலைவர்கள் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பயந்து பதுங்கியிருந்தார்கள்....
யாழ் முஸ்லிம்கள் இன சுத்திகரிப்பு செய்யப்பட்டபோது கம்முதாவை நடத்திக்கொண்டிருந்தார் பிரமதாசா.....
சந்திரிக்காவின் கண் பறிக்கபட்டபோதும்,புலிகள் விடயத்தில் கண்னைமூடிக்கொண்டிருந்தார்......
ரணில் வந்த போது புலியோடு ஒப்பந்தம் செய்து பூனையாய் அடங்கிகொண்டார்....
இப்படியாக சிங்கள தலைவர்கள் புலிகள் பற்றி சிந்திப்பதற்கே சிக்கனம் காட்டியபோது...
புலிகள் புண்ணியம் பார்க்காமல் முஸ்லிம்களை பூமிக்குள் புதைத்தார்கள்....
கடைசியாக மூதூர் மக்களை மூர்க்கதனமாக வெளியேற்றி புலிகள் அடுத்த மூச்சி விடுவதற்குள்..
மூரக்கத்தனமாய் இந்த புலிகளை அடக்கிய சிங்கள தலைவன்தான் இந்த மஹிந்த.....
உலகநாடுகளின் உறுமலுக்கு உறுப்படியான பதிலடிகொடுத்து,
புலியை எலியாக்கியவன்தான் இந்த மஹிந்த....
இதையெல்லாம் செய்து விட்டு 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு மக்கள் முன் வந்தபோது..
நன்றி செலுத்த வந்த முஸ்லிம் மக்களை...
இந்த ரஹுப் கக்கீம் சரத்துக்கு வாக்களியுங்கள் என்று சணியன் பிடித்தவன் போல், முஸ்லிம்களை முட்டாளாக்கி சரத்துக்கு முட்டுக்கொடுத்த வரலாருகள் வருங்காள சமூகத்துக்கு விளங்கவில்லை....
இதே சந்தர்ப்பத்தில் அஸ்ரப் இருந்திருந்தால் மஹிந்தவுக்கு மறியாதை செலுத்தி முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் இல்லை என்பதை சிங்கள மக்களுக்கு எத்திவைத்திருப்பார்...
அஸ்ரப்பின் பாசரையில் வளர்ந்த,அதுவும் புலிகளின் கொடுமைகளை அனுபவித்த அதாவுல்லாஹ் ஆணித்தரமாக ஆதரவளித்தார்..
புலிகளை பூனையாக்கியவர்களுக்கு....அவரும் ஆதரவு தெறிவிக்காது விட்டிருந்தால் வரலாற்றிலும் நாம் வங்கிறோத்து பிடித்தவர்கள் பட்டியலில் பாடமாய் இருந்திருப்போம்....
வீட்டில் வளர்க்கும் நன்றியுள்ள நாய்கூட நக்க தண்ணீர் கொடுக்காமல் விட்டால்,
வளர்த்தவனை வாழ்த்தும் என்று நினைக்கும் நமது முஸ்லிம் சமூகத்தை என்ன வென்று கூறுவது......
காத்தான் குடி படுகொலையை கண்முன்னே கண்டவன் எல்லளவும் புலிகளை மன்னிக்க மாட்டான்..

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar