தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம் தனது முப்பதாண்டு நிறைவையொட்டி தேசிய ரீதியாக நடத்திய திறந்த மட்டக் கவிதைப் போட்டியில் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா முதலாம் இடம் பெற்றுள்ளார். அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இவருக்கான சான்றிதழும் ஐயாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இலக்கியத் துறையில் கவிதை, பாடலாக்கம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், நூல் விமர்சனம் ஆகிய துறைகளில் இவர் ஏற்கனவே ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பு கம்பன் கழகம் நடத்திய திறந்த மட்டக் கவிதைப் போட்டியில் 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட இவர் 2015 ஆம் ஆண்டு முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தகவல் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Post a Comment