BREAKING NEWS

அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் றயிஸ{த்தீன்


“தியாகத் திருநாளை நினைவுபடுத்தும் இப்புனித நாளில் அனைவருக்கும் எல்லா வல்ல இறைவனின் அன்பும் - அருளும் கிடைப்பதற்கு பிரார்த்திக்கின்றேன்” -என  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர்  றயிஸ{த்தீன் தெரிவித்தார்
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:- 
அல்லாஹ் மீதான நம்பிக்கை, அன்பு, அவனது கட்டளைக்கு அடிபணிதல், தியாகம், பொறுமை, கடமை என்பவற்றை நினைவுபடுத்தும் இத்திருநாளில் இவையாவும் எமது சமூகத்தில் மேலும் வலுப்பெற நாம் பிரார்த்திக்க வேண்டும். 
இவை நம்மத்தியில் வலுவற்றுப் போனமையே எமது சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாகும். இவை மேலும் வலுப்பெறுமானால் எமது சமூகம் மேலும் சக்தி பெறும். அத்தோடு, சகோதர இனங்களோடு பொறுமையாகவும் - அன்பாகவும் நடந்து கொள்ளும் அதேவேளை, அவர்களுடனான நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும் -என அவர் மேலும் குறிப்பிட்டார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar