BREAKING NEWS

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஆர்ப்பாட்டத்தில்



(அஷ்ரப் ஏ சமத்)
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் இன்று கொழும்பு  லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவ் ஆசிரியா்கள் தொண்டா் ஆசிரியா்களாக நியமனம் பெற்றுவரும் ஆசிரியா்கள்    6ஆயிரம் ருபா சம்பளத்தை பெறுவதாகவும் தமக்கு சம்பளத்தை அதிகரிக்கும் மாறும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனா். தாங்கள் 6ஆயிரம் ருபாவையே பெறுகின்றோம்.  கடந்த வருடம் ஜூலை மாதம் தமக்கு 10ஆயிரம் ருபா தருவதாக சென்ன அரசாங்கம் இதுவரை வழங்க வில்லை  எனத் தெரிவித்து இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகம் வரை சென்றனா். அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் மேலதிகச் செயலாளரை சந்தித்து தமது மனுவை ஒப்படைத்தனா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar