BREAKING NEWS

ஜம்இய்யத்துல் உலமா தலைவருக்கெதிராக செயற்குழு உறுப்பினர் போர்க்கொடி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை இஸ்லாத்தின் வரம்புகளை மீறிச்செயற்படுவதாக அதன் செயற்குழு உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
உலமா சபைத்தலைவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஜம்இய்யாவின் திறந்த தன்மையை மூடி மறைத்து சர்வாதிகாரம் போல் நடைபெறுவதாக அதன் செயற்குழு உறுப்பினரான கொழும்பை சேர்ந்த மௌலவி யூசுப் நஜ்முதீன் அல்ஜஸீறாவுக்கு தெரிவித்தார். இவ்விடயம் சம்பந்தாக அவர் ஜம்இய்யா தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தெரிவித்த அவர் அதனை அல்ஜஸீறாவின் பார்வைக்கும் அனுப்பியுள்ளார். அதில் முக்கியமாக இடம் பெற்றுள்ள விடயங்களாவன,

சட்டமும் சூழ்ச்சியும்
2016.07.16 ம் திகதி நடைபெற்ற ஜம்மிய்யாவின் கடைசி நிர்வாக குழுக் கூட்டத்தில் தொடராக மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காதவர்களின் உறுப்புரிமையை நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு சாத்தியப்படாத ஒன்று என முடிவு செய்யப்பட்டதை நாம் அறிவோம். அச் சட்டம் சரியாக அமுல்படுத்தப்பட்டிருப்பின் இன்று நிர்வாக குழுவில் அங்கத்துவம் பெறும் பலர் பதவி இழந்திருப்பார்கள் என்பதை நீங்கள் எண்ணிபார்க்கவும். பொதுச் செயலாளரின் அறிக்கையில் 28 நிர்வாக குழுக் கூட்டங்களும், 3 அவசர கூட்டங்களும் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24.07.2016 ல் கண்டியில் நடைபெற்ற மத்திய சபைக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் மாவட்ட பிரதிநிதிகளுக்கு கீழ் காணும் நபர்களின் பெயர்களுக்கு வாக்களிப்பில் சிந்தித்து செயல்படுமாறும், இவர்கள் தலைமைக்கும் ஜம்மி;யாவின் செயல்பாடுகளுக்கும் நேரடியான எதிர்ப்பாளர்கள் என்றும் குறுஞ்செய்திகள் மூலம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பெயர்கள் வருமாறு
1.    ஆ.ஆ. அப்துல் கரீம்
2.    யு.ஆ.  அப்துல் அஸீஸ்
3.    ர்.ஆ.ளு.யு.ஆ. முஹம்மத் சித்தீக்
4.    யுஸ{ப் நஜ்முத்தீன்
ளு.ஆ.ளு. மூலம் அனுப்பப்பட்ட அந்செய்தியை நான்கு மாவட்ட பிரதிநிதிகள் 25.07.2016ல் எனக்கு பிரதி பண்ணியிருந்தனர். 14 வாக்குகள் பெற்று 33 ம் இடத்தில் நான் உள்ளேன் என்ற நல்ல செய்திகளையும் அறியத்தருகின்றேன்.

வாக்குறுதி மீறப்பட்டமை
கௌரவ தலைவர் அவர்கள் 16.07.2016ல் நடைபெற்ற கடைசி நிர்வாகக்குழுக் கூட்டத்தின் போது தனக்கு வேலைப்பழு வெளிநாட்டுப் பிரயாணங்கள் அதிகம் இருப்பதால் எக் காரணம் கொண்டும் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு தெரிவு செய்தால் நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்க்கவும்.
இது குறித்து நான் தலைவரின் முன் இவ் வாக்குறுதியை காப்பாற்றுமாறும் அதன்படி நடந்து முன் மாதிரியாக செயல்படும்படியும் கூறிய அறிவுரையை சிந்தித்து பார்க்கவும்.
ஆனால் தலைமைப் பதவியை எவ்வித மறுப்புமின்றி சந்தோஷமாக இம்முறையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் பதவி ஆசையும் தலைமைத்துவ மோகமும் கொண்டோர்களின் நிலை ஞாபகம் வருகின்றது.
உலமாக்களை காட்டியே பணம் வசூல் செய்தல்
உலமாக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்ற காரணத்தை காட்டி பல கோடிக்கனக்கான ரூபாய்கள் பெற்றுள்ளதை நான் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளேன்.
நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிடுமாறும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடப்பட்ட பொழுதிலும் தலைவர் கோபத்தோடு சீறிப்பாய்வதை நாம் அறிவோம். இப் பணம் ஹலாலா? ஊறராமா? கறுப்புப்பணமா? வெள்ளைப்பணமா? என்று கேள்வி எழுப்பபட்டதை மறந்திருக்க மாட்டிர்கள்.
நாம் அறிந்த மட்டில் சில வெளிநாட்டு தூதுவராலயங்கள் வெளிநாட்டு பிரமுகர்கள் மூலம் இப்பணம் பெறப்பட்டுள்ளதை நான் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட ஆயத்தமாக உள்ளேன்.
மனாகிபுஸ்ஸஹாபா, தக்ரிமுல்உலமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதை மறந்து விட முடியுமா? இவ்வளவு பணம் பெற்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது ஏன் என்று புரியவில்லை. வசூல் செய்யப்பட்ட பணத்தில் அரைப்பங்கே செலவழிக்கப்பட்டு வரவு செலவு காட்டப்பட்டது. மிகுதி பணம் யாருடைய கையில் இருக்கின்றது அல்லது யார் அனுபவிக்கின்றார்கள், உல்லாசம் செய்கின்றார்கள் என்ற விடயங்களை கண்டறிய வேண்டும். அல்லது உலமாக்களின் சொத்து விபரங்கள் 2003ம் ஆண்டு முதல் வெளிக்காட்ட வேண்டும் என்பதுடன் சரியான பதிலும் விவரங்களும் வெளிவாராத பட்சத்தில் மேலதிக தெளிவுக்காக உயர் மட்ட விசாரனைகளை நாடவேண்டி வரும் என எச்சரிக்கிறோம் எனவும் மௌலவி யுசுப் நஜ்முதீன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்: முபாறக் அப்துல் மஜீத், ஜம்இய்யத்தல் உலமாவின் கல்முனைக்கிளை முன்னாள் உப தலைவர். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar