BREAKING NEWS

ISIS உடன் இலங்கை முஸ்லீம்களுக்கு தொடர்பில்லை ; கோத்தா தெரிவிப்பு ...




இலங்கை முஸ்லீம்களுக்கும் ஐ எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என முதன் முதலாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது தான் என முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதியுடன் அவர் நேற்று அனுராதபுரம் ஜயந்திபுர ரஜமஹா விகாரையின் பிரதம தேரர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


சில தேரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவர்களின் நடவடிக்கைகளால் கடந்த ஆட்சியாளர்களுக்கும் இழுக்கு என பிரதம தேரர்கள் கூறியபோது அதற்கு விளக்கம் அளித்துள்ள முன்னாள் பாதூகாப்பு செயளாலர் விளக்கம் அளித்த போது மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


நான் பொதுபல சேனாவின் ஒரு நிகழ்வுக்கு சென்றதை காட்டி என்னை அவர்களோடு தொடர்பு படுத்தி பேசினார்கள்.நான் தான் அலுத்கம கலவரத்தை ஞானசார தேரரை வைத்து நடத்தியதாக கூறினார்கள்.நான் நாட்டில் இல்லாத போது அந்த சம்பவம் இடம்பெற்றது.அலுத்கம கூட்டத்துக்கு அனுமதி எடுத்து கொடுத்தது யார் என தேடிப்பாருங்கள்.கண்டியில் இடம்பெற்ற பொதுபல சேனாவின் முதலாவது கூட்டத்துக்கு அனுமதி எடுத்து கொடுத்தது யார் என தேடிப்பாருங்கள் ஹெல உறுமய என்பது மிகத்தெளிவாக தெரியும்.தேரர்கள் எவரும் எம்மிடம் உதவி கோரினால் நாம் உதவி வழங்குவோம் அதற்காக நாம் அவர்களை வைத்து இயக்குகிறோம் என கூறுவது தவறு.


அதே நேரம் அலுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் ரானுவத்தை களத்தில் இறக்கி சேதங்களை சரி செய்துகொடுத்தோம் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தோம்.


ஞானசார தேரர் எமது ஆள் என்றால் ஏன் அவரை இந்த நல்லாட்சி சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளது.அலுத்கம கலவரம் தொடர்பில் விசாரிக்க ஆணைக்குழு அமைத்து விசாரிக்க சொல்லுங்கள்.

நாம் தொடர்புபட்டிருந்தால் அவரோடு சேர்த்து எமக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள்.


சம்பிக்க ரதன தேரர் ஆகியோர் நல்லாட்சியில் இருக்கும் வரை ஒரு நாளும் அந்த தேரருக்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஐ எஸ் அமைப்பில் இலங்கையர்கள் இருப்பதாக இவர்கள் கூறிய போதும் ஐ எஸ் இலங்கையில் இல்லை என முதலில் கூறியது நான் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar