மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சி நிறுவனங்களைப் பாராட்டும் முகமாக, வருடந் தோறும் ஏற்பாடு செய்யும் "ஸ்வர்ண புரவர" விருது வழங்கும் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் (20) செவ்வாய்க் கிழமை மாலை, கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்றது.
இதன் போது, ஜனாதிபதி இணையத் தளத்தை ஆரம்பித்து வைப்பதையும், அமைச்சர் பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மற்றும் பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.


Post a Comment