(அஷ்ரப் ஏ சமத்)
பலஸ்தின் நாட்டின்
ஒருமைப்பாட்டுக்காக இலங்கை பண்நெடுங் காலமாக ஆதரவு தெரிவித்து வருகின்றது.
ஜ.நா.வில் கொண்டுவரப்பட்ட 130க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கும்
அவ்வப்போது இலங்கை ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. இலங்கை யுத்தம்
நடைபெற்று வெற்றி கண்ட ஒரு நாடாக மீள் பெற்றது போன்று பலஸ்தீனமும் ஒரு நாள்
வெற்றி பெற்று மீள் எழுச்சி பெறும். . அந்த நாட்டினை ஒரு சுதந்திர
நாடாக பிரகடனப்படுத்துவதற்கும் அந்த நாட்டை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்
அதற்காக நாம் என்ம்றும் பலஸ்தீனத்துக்கு ஆதராவாக செயல்படல் வேண்டும்.
முன்னாள் பிரதம மந்திரி சிறிமா அம்மையாா் காலம் தொட்டு மகிந்த ராஜபக்ச
வரையிலான ஜனாதிபதி வரை சகல பலஸ்தீன் சம்பந்தமான மசோதாக்களுக்கும் இலங்கை
ஆதரித்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய வெளிநாட்டு அமைச்சா் மங்கள
சமரவீரவின் வெளிநாட்டு கொள்கையின் படி பலஸ்தீன் யுனஸ்கோ மசோதாவுக்கு
நடுநிலைமை வகிப்பது என் நிலையில் இலங்கை வெளிநாட்டு கொள்கையின் நியயமாகும் ?
என - ஜே.வி.பி பராளுமன்ற உறுப்பிணா் விமல் ரத்நாயக்க - தெரிவித்தாா்.
பலஸ்தீன
ஒருமைப்பாட்டிற்கான இலங்கை ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஜக்கிய நாடுகளின்
பலஸ்தீன ஒருமைப்பாட்டு கூட்டம் நேற்று(29) கொழும்பில் உள்ள விளையாட்டு
அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வினை இலங்கை பலஸ்தீன்
நட்புரவு சங்கத்தின் தலைவா் முன்னாள் அமைச்சரும் அரசாங்க தகவல்
நிலையத்தின் தலைவா் இம்தியாஸ் பாக்கீா் மாாக்காா் ஏற்பாடு செய்திருந்தாா்.
பலஸ்தீன் இலங்கை பாராளுமன்ற நட்புரவுச்
சங்கத்தின் தலைவரும் சுகாதார அமைச்சருமான டொக்டா் ராஜித்த சேனாரத்தின
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். இவ் அமைப்பின் செயலாளா் ஜே.வி.பி
பாராளுமன்ற உறுப்பணிா் பிமல் ரத்நாயக்க, பலஸ்தீன் துாதுவா் ஆலயத்தின்
செயலாளா் ஹிசாம் அபுதாஹா மற்றும் வெளிநாட்டுத் துாதுவா்கள் பாராளுமன்ற
உறுப்பிணா்கள் பலரும் கலநது கொண்டனா். மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணா் விமல் ரத்நாயக்க
தெரிவித்தாா்
தொடா்ந்து உரையாற்றிய விமல் ரத்நாயக்க தெரிவித்தாவது -
அண்மையில்
ஜக்கிய நாடுகளின் யுணஸ்கோவினால் அல் அக்சா பள்ளிவாசலை தேசிய சொத்தாக
பிரகடனப்படுத்தும் மசோதா கடந்த ஒக்டோபா் 13ஆம் திகதி நடைபெற்றபோது
இலங்கையும் ,இந்தியாவும் இம்முறை வாக்கெடுப்பில் இருந்து நடுநிலை
வகித்துள்ளது. இதில் இருந்து இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை இஸ்ரேல்
மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு திசை திருப்பட்டுள்ளது. . ஆனால் இம்
மசோதாவுக்கு இலங்கை ஏப்ரல் மாதம் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு
ஒக்டோபா் மாதம் நடு நிலை வகிக்கின்றது. தற்போதைய வெளிநாட்டு அமைச்சா்
மங்கள சமரவீர வெளிநாடடு அமைச்சராக பதவியேற்றதன் பின் பலஸ்தீனுக்கு
வாக்களிக்காமாமதையிட்டு இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் இதனைக்
கண்டித்தல் வேண்டும். இதற்காக எமது கட்சி நாடு புராவும் ஒர் ஆர்பாட்டத்தை
நடாத்தும். இதனை மக்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும.
கடந்த
வாரம் வெளிநாட்டு அமைச்சா் மங்கள சமரவீரவின் டெயிலி மிரா் பத்திரிகையின்
பேட்டியொன்றில் கூட ”அல் அக்சா ”பள்ளி வாசலை ஒரு” டெம்பல் மொளன்ட்” என
வர்ணித்துள்ளாா். இவருக்கு அல் அக்சா என்றால் என்ன வென்று தெரியாதொரு
வெளிநாட்டு அமைச்சா். பலஸ்தீனத்தில் 2 இலட்சம் பேர் பல்கலைக்கழகம்
சென்று கற்கின்றனா். காலத்துக்கு காலம் இஸ்ரேல் அங்கு உள்ள மக்களது
காணிகளையும் வஸ்துகளையும் வீடுகளை அழித்து வருகின்றனா். ஜ.நாவில் உள்ள
130க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து பலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாக
பிரகடனப்படுத்தியும் இஸ்ரேல் அமேரிக்கா ஒரு தலைப்பட்சமாக தனது
மிலேச்சத்தனமான குரோதத்தை விதித்து வருகின்றது.. என தெரிவித்தாா்.
இங்கு கநலது கொண்ட காதார அமைச்சா் டொக்டா் ராஜித்த சோனாரத்தின அங்கு உரையாற்றுகையில்
5000
வருடங்கள் பழமை வாய்ந்த பலஸ்தீன் அரபு நாட்டின் அண்மையில் பாராளுமன்ற
குழு அங்கு சென்றோம் அங்குள்ள நிலைமைகளை அவதாணித்தோம். . அங்கு பாராளுமன்ற
உறுப்பிணா்கள் 25 பேர் சிறைபிடிக்கபட்டுள்ளதால் பாராளுமன்றம் கூட அங்கு
நடைபெறுவதில்லை. விமானநிலையத்தில் நாங்கள் இறங்கியதும் இஸ்ரேவேல் படைகள்
வேறு விசா வழங்கி தமது வாகணம், பொதிகள் சகலதையும் பரிசீலித்தே எம்மை
அனுமதித்தனா். பலஸ்தீனத்திற்காக 2010 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவுடன் நான் இணைந்து அம் மக்களின் சுதந்திரத்திற்காக குரல்
கொடுத்தோம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த
சமயத்தில் ஜ.நா.கள் துாதுவராக அப்போது கடமையாற்றிய ஸ்டலி கல்பகே ரணசிங்க
பிரேமதாசாவிடம் சேர் ” எகிப்து நாடு கூட பலஸ்தீன் நாட்டுக்காக ஜ.நா.வில்
நடுநிலைமை வகிக்கின்றது. நாமும் நடுநிலை வகிப்போமா ? எனக் கேட்டதற்கு
ஜசே நீ ஆதராவாக வாக்களியும். எகிப்து நாடு பற்றி உணக்கு ஏன் கவலை என
சத்தம் போட்டு அது மட்டுமல்ல் ஜே.ஆர். ஜெயவா்தனாவினால் இலங்கையில்
கொண்டுவரப்பட்ட இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவைக“ கூட உடனடியாக பிரேமாதாச
மூடினாா். தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவின் தலைமையில்
பலஸ்தீன் நாட்டக்காக ஆதரவு தொடந்து முன்னெடுக்கபப்டும். நாம் வடக்கில்
யுத்தம் நடக்கும்போது எவ்வாறு யாழ்ப்பாணம் சென்றோமோ அதே போன்று தற்போது
பலஸ்தீனத்தில் நடைபெறுகின்றது. பலஸ்தீன மக்களது கடைகள், வீடுகள்,
சொத்துக்களை இஸ்ரேவேலா் பலவந்தமாக எடுத்து இஸ்ரேவேலா்களை குடியேற்றி
வருகின்றனா்.பலஸ்தீன நாட்டின் சுதந்திரத்திற்காக மாகத்மா காந்தி ,
நெல்சன் மண்டேலா, பாங் கீ மூன் வாரம் காலம் சென்ற கியுபா கஸ்ரோ பேன்ற
தலைவா்கள் குரல் கொடுத்து வந்துள்னா். எனவும் அமைச்சா் ராஜித்த
சேனாரத்தின அங்கு தெரிவித்தாா்.


Post a Comment