இலங்கை நாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து “கலாபூஷணம்” அரசவிருது வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவின்போது நிந்தவூர் - 13ம் பிரிவிவைச் சேர்;ந்த சமூகஜோதி எம்.ரீ அப்துல் கபூர் ஜே.பி அவர்கள் “கலா பூஷண அரச விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தேசிய ரீதியில் பல்வேறுபட்ட சமூக நல அமைப்புகளில் முக்கியஸ்தராக இருந்து செயல்பட்டுவரும் இவர் அம்பறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர் சமூக நலப் பேரவையின் ஸ்தாபகத் தலைவராகவும், சிரேஷ்டபிரஜைகள் சம்மேளத்தின் கௌரவச் செயலாளராகவும் இருந்து வருகின்றார்.
நிந்தவூர் மத்தியஸ்த சபை அ.மா. ஊடக வியலாளர் போரம், அ.மா தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை, முஸ்லிம் மீடியா போரம் (கொழுமபு) அகில இன நல்லுறவு ஒன்றியம் (ரத்தினபுரி) சிரேஷ்ட பிரஜைகளின் தேசிய ஒன்றியம் (கொழும்பு) ரத்தின தீபா பவுண்டேஷன் ஊடகம் (கண்டி) என்பனவற்றின் கௌரவ உறுப்பினராகவும் இருந்துவரும் எம்.ரீ.ஏ. கபூர் அவர்கள் சிரேஷ்ட ஊடக வியலாளரும் ஒரு சமாதான நீதவானுமாவார்.
இவரது நீண்ட கால சமூக நல சேவைகள் சமாதான முயற்சிகள் மற்றும் இன ஒற்றுமைபோடு ஊடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுமுகமாக “சமுக நிலா”“சமுக ஜோதி”“சாமஸ்ரீ தேச சக்தி”“ரத்தின தீபம்”“தேசாபிமானி ஊடக விபூஷணம்” போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment