(மினுவாங்கொடை நிருபர்)
“நிலையான யுகத்தில் மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்போம்”; என்ற தொனிப்பொருளிலான அபிவிருத்தித் திட்டங்கள்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டப் பணிகள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்பதாவின் தலைமையில் இன்று(19) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி,இன்று 19ஆம் திகதி வவுனியாவிலும், நாளை 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஆகியோர்கள் உடனான விசேட அபிவிருத்தித் திட்ட கலந்துரையாடல்களும் இதன்போது இடம்பெறவுள்ளன.
இந்த அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் “நிலையான யுகத்தின் நாட்டின் பிரார்த்தனை”,“நிலையான இலக்கு” போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டப் பணிகளும், வறுமையை நீக்குவதற்கான புதிய திட்டங்களும் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இதன்மூலம் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில்,ஐனாதிபதி பதவியேற்று 2 வருடங்கள் புர்த்தியாகியுள்ள 2017ஐனவரி 8ஆம் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை இப்பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும், அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்தப் பணிகளை ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இன்று வவுனியாவிலும், நாளை யாழ்ப்பாணத்திலும் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகம் அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(ஐ.ஏ.காதிர் கான்)
Post a Comment