BREAKING NEWS

ஜனாதிபதியின் ஈரானுக்கான விஜயத்தின் பின்னர் இலங்கை வர்த்தகர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் – ரிஷாட் நம்பிக்கை






-ஊடகப்பிரிவு
ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இம்மாத இறுதியில் ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படுமெனவும் அவர்நம்பிக்கை வெளியிட்டார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்திசபை. முதலீட்டு ஊக்குவிப்பு சபை, வர்த்தகத்திணைக்களம், தேயிலைசபை, சிலோன்வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சம்மேளனம்மற்றும் வெளிவிவகார அமைச்சின்பிரதிநிதிகள் ஆகியோரைஅமைச்சின்அ லுவலகத்தில்சந்தித்தபோதே அவர் இந்தத்தகவலை வெளியிட்டார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைக்கான ஈரானியபிரதித்தூதுவர் எம்ஆர்அஹமதி ஜனாதிபதியுடனான விஜயத்தின்போது இலங்கையிலிருந்து ஈரானுக்குச்செல்லும் வர்த்தகர்களுக்குஅ மைச்சர்ரிஷாட்பதியுதீன் தலைமை தாங்குவார் எனகுறிப்பிட்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்துதெரிவித்தபோது,
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகஉறவுகள், முதலீடு மற்றும் உல்லாசப்பயணத்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் எனவும்குறிப்பிட்டார்.
ஈரானுக்கும்இலங்கைக்குமிடையிலான உறவுகள்அண்மையகாலங்களில் பலமடைந்துள்ளபோதும் ஜனாதிபதியின்விஜயத்தின்பின்னர் இலங்கைவர்தகர்களுக்கு புதியஉத்வேகம் பிறக்குமெனவும் அமைச்சர்நம்பிக்கை வெளியிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar