BREAKING NEWS

ரணில் என்னை கைது செய்வார் உடனே சோனிகள் ரணிலை புகழ்வார்கள்

இது கற்பனைதான்...
அதில் படிப்பினையும் உண்டு...

ஞானசேரர்- வணக்கம் ஜனாதிபதி மைத்ரி அவர்களே..!

ஜனாதிபதி மைத்ரி- வணக்கம் சங்கைக்குறிய ஆமதுரு அவர்களே..!

ஞான- உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..

ஜனா- உங்களை சந்திப்பதில் நானும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஞான- இரட்டிப்பு மகிழ்ச்சி என்று ஏன் கூறுகின்றீர்கள்...?

ஜனா- என்னை பதவியில் அமர்த்துவதற்கு நீங்கள் செய்த உதவியை மறக்க முடியுமா அதனால் கூறினேன்....

ஞான- இல்லையே முஸ்லிம்கள்தான் உங்கள் ஆட்சியை கொண்டுவர உதவினார்கள் என்று கூறுகின்றார்களே...

ஜனா- சிரித்துவிட்டு....அது உண்மை தெறியாதவர்கள் கதைக்கும் கதை...
நீங்கள் இல்லையென்றால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக எங்களுக்கு வாக்களித்து இருப்பார்களா?

ஞான- உண்மைதான் அதனை நீங்கள் நன்றி உணர்வோடு கூறுவதை மனதார ஏற்றுக்கொள்கின்றேன்....

ஜனா- உண்மையில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயத்துக்கு, மஹிந்த அன்று நடவடிக்கை எடுத்து உங்களை கைது செய்திருந்தால், நாங்கள் இன்று ஆட்சிக்கட்டிலில் இருக்கமுடியுமா?  அதற்கு மஹிந்தவுக்கும் நன்றி சொல்லவேண்டும்போல உள்ளது...

ஞான- நீங்கள் சொல்வது தவறானது ஜனாதிபதி அவர்களே....
அப்படி நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தால் சம்பிக்க ரணவக்க அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்....

ஜனா- ஏன்?

ஞான- மஹிந்த எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதெல்லாம், உள்ளே இருந்து கொண்டு சமயோசிதமாக தடுத்தவர் அவர்தான்...
அவர் இல்லையென்றால், எங்கள் திட்டம் அத்தனையும் தவுடு பொடியாக ஆகியிருக்கும்...
அதனால்தான் சொல்கிறேன், நீங்கள் நன்றி தெறிவிக்கவேண்டும் என்றால் சம்பிக்கவுக்குத்தான் தெறிவிக்கவேண்டும்...

ஜனா- நீங்கள் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்ன?
ஞான- அதனை மட்டும் கேட்காதீர்கள், அது பரமரகசியம், ரணில் ஐயாவுக்கு மட்டும்தான் அது தெறியும்....

ஜனா- அப்படியென்றால் நீங்கள் ரணில் அவர்களை சந்திப்பதை விட என்னைத்தானே சந்தித்து உதவி கேட்கின்றீர்கள் காரணம் புரியவில்லையே...!

ஞான- அது சேர்.....அவரை நாங்கள் சந்தித்து பேசினால் சோனகர்கள் அவருடன் கோபிப்பார்கள் அதனால்தான்.......

ஜனா- அப்படியென்றால் என்னுடன் கோபிக்கமாட்டார்களா?

ஞான- நீங்கள் அடுத்தமுறை தேர்தல் கேட்கமாட்டீர்கள், அதனால் உங்களுடன் அவர்கள் கோபித்தாலும் உங்களுக்கு நஸ்டம் வரப்போவதில்லைதானே...! அதனால்தான் உங்களுடன் பகிரங்கமாக பழகுகின்றோம்....
ரணில் அவர்கள் இன்னும்  ஜனாதிபதியாகி பார்க்கவில்லை அதனால் அவருக்கு சோனிகளின் வாக்கு தேவைபடும் அதனால் அவர் சமயோசிதமாக நடக்கவேண்டியுள்ளது, அதனால் அவரை பகிரங்கமாக சந்திப்பதை தவிர்த்து வருகின்றோம்....

ஜனா-  இப்போது முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயத்தை ரணில் அவர்கள் தட்டிக்கேட்கவில்லை என்று முஸ்லிம்கள் பேசிக்கொள்கின்றார்களே அது அவரை பாதிக்கும்தானே....!

ஞான- அதற்கு கொடுப்புக்குள்ளால் சிரித்து விட்டு...
அது வந்து சேர்....என்று முணுமுணுக்கின்றார்...
ரணில் அவர்கள் ஒரு திட்டம் வைத்துள்ளார் அதனை தேர்தல் நெருங்கும் போது செயல்படுத்தவுள்ளார், அதற்கு என்னுடைய உதவியையும் கோரியுள்ளார்...

ஜனா- அது என்ன திட்டம், நான் யாரிடமும் சொல்மாட்டேன் கூறுங்கள்......

ஞான- அது ஒரு திட்டமும் இல்ல சேர்....
தேர்தல் நெருங்கும் போது முஸ்லிம்களை நான் கடுமையாக சீண்டுவேண், அந்த நேரம் ரணில் அவர்கள் என்னை கைது செய்வார் உடனே சோனிகள் எல்லாரும் ரணிலை புகழ்வார்கள், வாக்குகளையும் அள்ளி போடுவார்கள், அவரை ஜனாதிபதி ஆக்கிவிட்டு எங்களின் தலைவர் சம்பிக்க ரணவக்க அவர்களை பிரதமராக்கி விடுவோம் இதுதான் எங்கள் திட்டம் சேர்...

ஜனா- அடேங்கப்பா கடும்திட்டமே இது....
இல்லை சேர்... ரணில் ஜனாதிபதி ஆனபிற்பாடு அவரையும் சந்தர்ப்பம் பார்த்து கவுட்டு விட்டு சம்பிக்கவை ஜனாதிபதியாக்கி விடுவதே எங்கள் நோக்கம் சேர்....

ஜனா- இதற்கெல்லாம் நிதி உதவி செய்வது யார்...

ஞான- அதெல்லாம் உங்களுக்கு தெறியாதா சேர்....
நம்மட பெறிய நாட்டாமைகள்தான்...

ஜனா- சரி சரி இப்ப நீங்க வந்த நோக்கம் என்ன?

ஞான- நோக்கம் எல்லாம் சொல்லப்படுகிறது...
ஜனாதிபதி அதனையெல்லாம் காதார கேட்டுவிட்டு, உடனே உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றேன் என்கிறார்...

சந்திப்பு நிறைவடைகின்றது......

எம்.எச்.எம்.இப்ராஹிம்....
கல்முனை...

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar