++++++++++++++++++++++++++++++ +++++++++++++
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
மத்ரஸா
மாணவர்களுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் பரீட்சை என்பன நடத்தப்பட
வேண்டும் என நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை பூர்த்தி செய்ய
முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க
செயலாகும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க
அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த முயற்சிக்குத் தேவையான உதவிகளை
வழங்கத்; தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். .
இதேவேளை,
பொதுவான பாடத்திட்டம் மற்றும் பரீட்சை என்பன எவ்வாறு மேற்கொள்ளப்பட
வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின்
கருத்துக்களையும் - ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவது சிறப்பாக அமையும்
எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
இலங்கையில்
இயங்கி வருகின்ற மத்ரஸாக்களுக்கு பொதுவான பாடத்திட்டங்களோ, பரீட்சைகளோ
இல்லை. தத்தமது கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வொரு மத்ரஸாக்களும் இயங்கி
வருகின்றன. இது சில சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாக
சுட்டிக்காட்டி அனைத்து மத்ரஸாக்களுக்கும் பொதுவான பாடத்திட்டமொன்று
அறிமுகப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தன.
அந்தவகையில்
நானும் பல சந்தர்ப்பங்களில் இந்தக் கோரிக்கையை அமைச்சர் ஹலீமிடம்
முன்வைத்திருந்தேன். கடந்த வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் சமய விவகார
அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதும் நான் இந்த
விடயத்தை வலியுறுத்தியிருந்தேன். அதுமட்டுமல்லாமல், கடந்த வருடம் மே மாதம்
4ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைச்சர் ஹலீமுக்கும் எனக்கும்
இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
அவர்
அப்போது எம்மிடம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இன்று நடவடிக்கை
எடுத்துள்ளமை பாராட்டத்தக்கது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும்
நாங்கள் வழங்கத் தயாராகவுள்ளோம். – என்றார்.
Post a Comment