BREAKING NEWS

. சுன்னத் தொழுது விட்டு ஒரு முஸ்லிம் தரும் உறுதி மொழியை நம்­பா­விட்டால் நான் ஒரு முஸ்­லி­மாக இருக்க முடி­யாது

ARA.Fareel-

முப்­பது வருட கால­மாக மரத்தின் அடி­யி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கு நீர் வார்த்துக் கொண்­டி­ருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்­டார்கள். மரமே தனது வாழ்க்­கை­யாக எண்­ணி­யி­ருந்த அவரை 'நீங்கள் மரத்தின் நிழலில் இருந்­தது போதும்' என்று தள்ளி வைத்து ஓரம் கட்டி விட்­டார்கள்.

ஹசன் அலியின் பொதுச்­செ­ய­லாளர் பதவி பறிக்­கப்­பட்­டு­விட்­டது என்ற தகவல் கிடைத்­ததும் பலர் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­விட்­டனர். என்ன நடந்­தது சேர்? கூறு­வீர்­களா? என்று கேட்டோம்.அவர் அமை­தி­யாக,  நிதா­ன­மாக பதி­ல­ளித்தார்.''

டிசம்பர் 14 ஆம் திகதி நடை­பெற்ற உச்ச பீட கூட்­டத்தில் பொதுச் செய­லாளர் பதவி விவ­கா­ரத்தில் நானும் தலை­வரும் முரண்­பட்டு பிரிந்திருக்கக் கூடாது. கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது. கட்­சியை காப்­பாற்ற வேண்­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தலை­வரும், நானும் கதைத்து ஒரு முடி­வுக்கு வர வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக கமிட்­டி­யொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது.அடுத்த தினம் டிசம்பர் 15 ஆம் திகதி உயர்­பீட உறுப்­பினர் அன்­வரின் தெமட்­ட­கொ­டை­யி­லுள்ள காரி­யா­ல­யத்தில் நானும் தலை­வரும் சந்­தித்தோம். அங்கு வந்த தலைவர் முதலில் வுழூ செய்து கொண்டார். பின்பு இரண்டு ரக்அத் சுன்னத் தொழு­கையை நிறை­வேற்­றினார். என்னை கட்­டி­ய­ணைத்து முஸாபஹா செய்து கொண்டார். பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொள்வோம் என்றார்.

நான் தலை­வரிடம் தெரி­விக்க வேண்­டி­ய­தை­யெல்லாம் தெரி­வித்தேன். நான் தேர்­தலில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­த­போது  தேசியப் பட்­டி­யலில் எம்.பி.பதவி தரு­வ­தாகக் கூறி அதனைத் தடுத்­த­தையும் விளக்­கினேன். அனைத்­தையும் தலைவர் ஏற்­றுக்­கொண்டார். நான் வுழூ­வுடன் கதைக்­கிறேன். அது நான் தந்த உறுதி. அதனை நான் நிறை­வேற்­றுவேன் என்றார். தேர்­த­லொன்று விரைவில் வரப்­போ­கி­றது. கட்­சியை முடக்க முடி­யாது. தேர்தல் ஆணை­யா­ளரைச் சந்­தித்து விட்டுக் கொடுப்­பு­களைச் செய்ய வேண்­டு­மெ­னவும் கூறினார்.  நீங்கள் என்ன சொல்­கி­றீர்கள்? என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் என்றும் என்னிடம் வின­வினார்.

ஜன­வரி 9 ஆம் திக­தி­யன்று பாரா­ளு­மன்ற அமர்வில் நீங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி பிர­மாணம் செய்து கொள்­ளலாம். அதற்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் செய்­யப்­படும். நாளைக்குப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்ளார். சகல அதி­கா­ரங்­களும் கொண்ட செய­லாளர் பத­வியை பேராளர் மாநாட்டில் உங்­க­ளுக்குத் தருவேன் என்று கூறி தலைவர் என்னை மீண்டும் முஸாபஹா செய்து கொண்டார்.

அப்­போது என்­று­மில்­லாத நம்­பிக்கை தலைவர் மீது ஏற்பட்­டது. நானும் மஃரிப்  தொழுது விட்டு வுழூ­வு­டனே இருந்தேன். சுன்னத் தொழுது விட்டு ஒரு முஸ்லிம் தரும் உறுதி மொழியை நம்­பா­விட்டால் நான் ஒரு முஸ்­லி­மாக இருக்க முடி­யாது. அதனால் நானும் நம்­பினேன்.மறுநாள். அது டிசம்பர் 16 ஆம் திகதி. தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவைச் சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. எமக்­கான சந்­திப்பு நேரம் பிற்­பகல் 3 மணிக்கே தரப்­பட்­டிருந்தது. நான் அங்கு பிற்­பகல் 2.45 மணிக்கே சென்­று­விட்டேன். எமது நேரம் வரும் வரை தேர்­தல்கள் ஆணைக்­குழு தலை­வரின் அலு­வ­ல­கத்தில் காத்­தி­ருந்தேன். அப்­போது தலைவர் வந்தார். வந்­ததும் எனது கையில் ஒரு பைலைத் தந்தார். அந்தப் பைலினுள் சல்மான் எம்.பியின் இரா­ஜி­னாமா கடிதம் இருந்­தது. 

சல்மான் தனது இரா­ஜி­னாமா கடி­(16.12.2016) செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளார். இப்­போது அதற்­காக அவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு போய்க்­கொண்­டி­ருக்­கிறார் என்றார். ஆனால் சல்மான் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை கொடுக்­க­வில்லை.தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வு­ட­னான சந்­திப்பின் போதும் எனக்கு பொதுச் செய­லாளர் பத­வியும் தேசி­யப்­பட்­டி­யல் எம்.பி பத­வியும் வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஜன­வரி 9 ஆம் திகதி நான் பாரா­ளு­மன்­றத்தில் இருக்க முடியும் என்றும் உறு­தி­யாகக் கூறினார்.

ஜன­வரி 7 ஆம் திகதி அல்­லது ஜன­வரி 8 ஆம் திகதி என நினைக்­கிறேன். என்னைத் தொலை­பே­சி­யூ­டாகத் தொடர்பு கொண்டார். 10 ஆம் திக­திக்கு தாருஸ்­ஸ­லா­முக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்­தார். அவ­ரது அழைப்பை ஏற்று தாருஸ்­ஸ­லா­முக்குப் போனேன்.

நான் மூதூ­ருக்குப் போகிறேன். என்­னுடன் வாருங்கள் என்று தாருஸ்­ஸ­லாமில் வைத்துக் கூறினார், 15 ஆம் திகதி புத்­த­ளத்தில் ஒரு புரோ­கிராம் இருக்­கி­றது. நீங்கள் வர­வேண்டும் என்றார். அன்று சல்­மானின் இரா­ஜி­னாமா பற்­றியும் பேசினார். சல்மான் ஜனவரி 16 ஆம் திக­தியே இரா­ஜி­னாமா கடி­தத்தை கைய­ளிக்­க­வுள்­ளளார். அதனால் உங்கள் பெயர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக 18 ஆம் திக­தியே கசெட்  பண்­ணப்­படும் என்றும் தெரி­வித்தார்.

புத்­த­ளத்­துக்கு நானும் அவ­ருடன் போனேன். இரு­வரும் இரவு சாப்­பாட்டை முடித்தோம். உங்­க­ளுக்கு நாளை காலையில் கோல் பண்­ணுறேன் என்று கூறிச்­சென்­றவர் அதன் பின்பு என்னை தொடர்பு கொள்­ள­வில்லை. 

கடந்த 11 ஆம் திகதி நடை­பெற்ற கட்­டாய உயர்­பீட கூட்­டத்தில் நிர்­வா­கிகள் தெரிவு இடம் பெற்­றது. தலை­வ­ராக ரவூப் ஹக்­கீமும் செய­லா­ள­ராக மன்சூர் ஏ.காதரும்  நிய­மிக்­கப்­பட்­டனர். எனக்கு தவி­சாளர் பதவி வழங்­கப்­பட்­டது. நான் மறுத்தேன். சகல அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லாளர் பத­வி­யையே நான் வேண்டி நின்றேன்.நஸீர் அஹ­மட்டும் அன்­வரும் என்­னிடம் வந்து தவி­சாளர் பத­வியை எடுங்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை பிறகு தரு­கிறோம் என்­றார்கள். ஹரீஸ் எம்.பியே என்னை  இந்தப் பத­விக்கு முன்­மொ­ழிந்தார். அவ­ருக்கு நான் நன்றி கூறினேன். ஆனால் இந்தப் பத­வியை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன் என்றேன்.

செய­லாளர் பத­விக்­கான நிய­மன நேரத்தில் கட்­சியின் தலைவர், செய­லாளர் நிய­மிக்கும் அதி­கா­ரத்தை எனக்குத் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்.செய­லாளர் பத­வியில் மாற்றம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. மன்சூர் ஏ.காதரே செய­லா­ள­ராக இருக்க வேண்டும். நான் நிய­மிப்­ப­வரை விரும்­ப­ா­விட்டால் நீக்கிக் கொள்­ளலாம் என்றார். நிஸாம் காரி­யப்பர் இதை நியா­யப்­ப­டுத்­தினார். 

இவ்­வி­டத்தில் ஜவாட் எழுந்தார். நாளைக்குப் பேராளர் மாநாடு. ஹசன் அலி தவி­சாளர் பத­வியை வேண்டாம் என்று கூறி­விட்டார். அதனால் அவர் பேராளர் மாநாட்டில் சாதா­ரண கதி­ரையில் தான் அமர வேண்டும். அந்தக் காட்­சியை எம்மால் பார்க்க முடி­யாது. அவர்தான் கட்சி என்று கூறினார் ஜவாட். சேர்…. தவி­சாளர் பத­வியை ஏற்றுக் கொள்­ளுங்கள். நீங்கள் மேடையில் இருக்க வேண்டும் என்­றார்கள். கெஞ்­சி­னார்கள்., கோஷம் எழுப்­பி­னார்கள்.

இது என்ன நாடகம்! எனக்­கென்று தனித்­துவம் உள்­ளது. இலட்­சியம் உள்­ளது. எழுந்து நின்றேன். எனது கண்கள் கலங்­கின. உணர்ச்சி வசப்­பட்டேன். டிபரன்ட் மூடுக்­குள்­ளானேன்.எனது 30 வருட அர­சியல் வாழ்­வு  முடி­வுக்கு வந்­துள்­ளது என்று கவ­லை­யுற்றேன். எழுந்து சென்று லீடரைக் கட்­டிப்­பி­டித்து முஸாபஹா செய்தேன். இது எனது கடைசி நாள் என்றேன்.நான் உயர்­பீடக் கூட்­டத்­தி­லி­ருந்தும் வெளி­யே­றினேன். நஸீர், ஜவாட் எல்­லோரும் ஓடி வந்து என்னைத் தடுத்­தார்கள். நான் எனது முடிவில் உறு­தி­யாக வெளி­யே­றினேன்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar