( ஐ. ஏ. காதிர் கான் )
முன்னாள்
சபாநாயகரும், சவூதி அரேபியா ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி - இலங்கைக்
கிளையின் தலைவருமான மர்ஹூம் எம்.எச். முஹம்மதுவின் முதலாம் ஆண்டு நினைவு
தினத்தையொட்டி, கொழும்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையம், தேசிய நல்லெண்ணம் மற்றும் தெளிவுக்கான மன்றம் ஆகியன இணைந்து இந்நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளன.
இவ்விரு நிறுவனங்களின் தலைவராக மரணிக்கும் வரை ஆளுமையுடன் பணியாற்றிய
மற்றும் இன, மத ஒற்றுமைக்கும் நல்லெண்ண செயற்பாட்டுக்கும் முனைப்புடன்
சேவையாற்றிய அன்னாரின் நினைவாக புத்திஜீவி ஒருவரைக் கொண்டு நினைவுப் பேருரை
நிகழ்த்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இஸ்லாமிய நிலையத்
தலைவரும் முன்னாள் கொழும்பு மேயருமான எம். ஹுஸைன் முஹம்மத்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபிய அரச
அனுசரணையில் இஸ்லாமிய நிலைய ஏற்பாட்டில் உலக இஸ்லாமிய மகா நாடொன்றை
கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மர்ஹூம் எம்.எச். முஹம்மத், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment