ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு இஸ்லாத்தை சொல்வது கடமையா அல்லது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை சொல்வது கடமையா?
நபியவர்களின் வாழ்வை பார்க்கும் போது அவர்கள் மக்கா முதல் மதீனாவில் மரணிக்கும் வரை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை சொல்வதிலேயே அதிக காலத்தை செலவு செய்துள்ளார்கள்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு தொழுகைக்கு பின்னரான உரைகள், வெள்ளிக்கிழமை குத்பா, சகஜமாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது, சம்பவங்கள் போன்றவை மூலம் அவ்வப்போது இஸ்லாத்தை கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் மதீனாவில் உள்ள முஸ்லிம்களை முழுக்க முழுக்க திருத்தி விட்டு அதன் பின் இஸ்லாத்தை ஏனையவர்களுக்கு சொல்லப்போகிறேன் என நபியவர்கள் இருக்கவில்லை. இத்தனைக்கும் மதீனத்து முஸ்லிம்களில் சிலர் நய வஞ்சகர்களாக இருந்தனர். தொழுகையில் பொடு போக்குள்ளவர்களாக இருந்தனர். விபச்சாரம், களவு என்பன குறைந்த அளவிலாவது இருந்தது.
நபியவர்கள் இத்தகைய குற்றச்செயல்களுக்கு தண்டனைகள் வழங்கினார்கள். மற்றவர்களை அழைத்து புத்திமதி சொன்னார்கள்.
அதே போல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு இஸ்லாத்தை கற்பிக்க உலமாக்களை நியமித்தார்கள். அவர்கள் பள்ளிவாயல்களில் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுத்தார்கள்.
ஆனால் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுக்கவென நபியவர்கள் குழுக்களை அனுப்பி வைக்கவில்லை. மாறாக முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுக்கவே குழுக்களையும் தனி நபர்களையும் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைக்க செல்வதையே நபியவர்கள் ஃபீ சபிலில்லாஹ் - அள்ளாஹ்வின் பாதை - என குறிப்பிட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுத்தலை நபியவர்கள் ஒரு போதும் ஃபீ சபீலில்லாஹ் என சொல்லவில்லை. மறாக அதனை ஒருவருக்கு ஒருவர் உபதேசம் செய்தல் என்ற வகையில் அனைவர் மீதும் கடமை என காட்டினார்கள்.
இன்று பல ஜமாஅத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியிலேயே குண்டுச்சட்டிக்குள் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அள்ளாஹ்வின் பாதை என பொய்யாக கூறி அள்ளாஹ்வையும் ரசூலையும் ஏமாற்ற நினைக்கிறார்கள். இன்னும் சிலர் முஸ்லிம்களுக்கு ஏகத்துவ இஸ்லாத்தை சொல்வது மட்டுமே தமது பணி என செயற்படுகின்றனர். இதுவும் நபி வழிக்கு மாற்றமானதாகும்.
முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுக்க நபியவர்கள் இஜ்திமாக்களை நடத்தவில்லை. தர்பிய்யாக்களை நடத்தவில்லை. மாறாக பள்ளிகளை உருவாக்கி அதில் மதுரசாக்களை உருவாக்கி கற்றுக்கொடுக்கும் வழி முறையை கற்றுக்கொடுத்தார்கள். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஏகத்துவத்தை சொல்லவே இஜ்திமா நடத்தினார்கள். மக்ஜாவின் மலையடிவாரத்தில் அனைத்து முஸ்லிம் அல்லாதவர்கள் இஜ்திமா திரட்டி தஃவா செய்தார்கள்.
முஸ்லிம்களுக்கு ஏகத்துவத்தை கற்றுக்கொடுப்பதே தம் பணி என நபியவர்களும் சஹாபாக்களும் இருந்திருந்தால் இஸ்லாம் மதீனாவை தாண்டி இராது.
இதே போன்றே இன்னொரு ஜமாஅத் முஸ்லிம்களை ஒரு சமூக அமைப்பாக மாற்றுவது மட்டுமே தம் ஆயுள் கடமை என செயல்படுகின்றனர். நபியவர்கள் மதீனா சென்று அங்கு முஸ்லிம் சமூக கட்டமைப்பை உருவாக்கிய அடுத்த வருடமே முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாத்தை சொல்ல தனிநபர்களையும் குழுக்களையும் அனுப்பி வைத்தார்கள்.
ஆகவே முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இயக்கங்கள் தமது முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமேயான பிரசாரங்களை குறைத்துக்கொண்டு முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் ஏகத்துவத்தையும், இஸ்லாத்தையும், இஸ்லாமிய கட்டமைப்பையும் ஆயுதத்தை முதன்மையாக கருதாமல் இஸ்லாம் பற்றிய அறிவு, நற்பண்புகள், ஏழை வரிகள் என்பவற்றை எடுத்துக்கொண்டு போக வேண்டும். அதுதான் உண்மையான ஃபீ சபீலில்லாஹ்.
அதனை விடுத்து இந்த இயக்கங்கள் முஸ்லிம் சமூகத்துள் உருவாகி இந்த 70 - 80 வருட காலங்களுள் முஸ்லிம் சமூகத்துள் ஏற்பட்ட மறுமலர்ச்சி என்ன என்பதை பார்க்கும் போது சண்டைகளும் சச்சரவுகளும் பிளவுகளுமே அதிகரித்துள்ளன. ஒரு வீட்டுக்குள் நான்கு ஜமாஅத்துக்கள் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து இயக்கங்களும் இனி முஸ்லிம் சமூகத்துள் மட்டும் தமது பணிகளை செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டு இந்த ஏகத்துவத்தை தெரியாத மக்கள் மத்தியில் இதனை கொண்டு போக முயல வேண்டும். ஆயிரம் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் இஸ்லாத்துக்கு எடுக்க முயலும் நபி வழிக்கு மாற்றமான வழியை விட்டு விட்டு ஆயிரம் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் இஸ்லாத்துக்கு எடுப்பதை விட ஒரு முஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தை ஏற்பது மிகச்சிறந்தது என்ற குர் ஆன் ஹதீத் வழி காட்டலை பின்பற்ற முன்வர வேண்டும்.
- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி

Post a Comment