BREAKING NEWS

ஒரேநாளில் கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம்


ஒரேநாளில் கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்திற்கான
ஒப்பந்தம் அமைச்சர் ரிஷாட் முன்னிலையில் இன்று கைச்சாத்து
ஊடகப்பிரிவு

இலங்கையின் வர்த்தக வரலாற்றில்முதல் தடவையாககம்பனிகளை இலத்திரனியல் அடிப்படையில்தன்னியக்க முறையி;ல்பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம்  இன்றுகாலை (30.05.2017) வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
கம்பனிபதிவாளர் திணைக்களத்திற்கும்,கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்தஒப்பந்தம் தொடர்பானதிட்டத்தைஅமுல்ப்படுத்த 57மில்லியன் ரூபாசெலவிடப்படுகின்றது. இந்தத்தொகையைகம்பனிபதிவாளர் திணைக்களம்,வரியிறுப்பாளர்களிடமிருந்துஅறவிடாமல் கம்பனிபதிவாளர் நிதியத்திடமிருந்துபெற்றுவழங்குகின்றது.
இந்தபுதியதிட்டம் இன்றுதொடக்கம் ஆரம்பிக்கப்படுவதோடு,மார்ச் இறுதியில் நிறைவுபெறுகின்றது. அதன் பின்னர் ஒரேநாளில் புதியகம்பனிகளை இலத்திரனியல் முறையின் கீழ்;ஒன்லைனில் பதிவுசெய்துகொள்ளமுடியும். இதுவரைகாலமும் ஒருகம்பனியைபதிவுசெய்வதற்கு இருந்தபல்வேறுசிரமங்கள் இந்தபுதியமுறைமூலம் நீக்கப்படுவதோடுமாத்திரமின்றி மூன்றுநாட்கள் காத்திருக்கவேண்டியதேவையும் இல்லை.
வெளிநாடுகளில் வாழ்வோர் ஒருகம்பனியை இலங்கையில்பதிவுசெய்யவேண்டுமாயின்,இங்குவந்துசிரமப்படவேண்டியிருந்தநிலை இனிமேல் இருக்காது. அவர்கள் தமதுஆவணங்களையும்,கடவுச்சீட்டுமற்றும் விபரங்களையும் ஒன்லைன் மூலம் வழங்கிஅவைசரிபார்க்கப்பட்டபின் தமதுகம்பனியைஒரேநாளில் பதிவுசெய்துகொள்ள இந்தபுதியத்திட்டம் வழிவகுக்கின்றது.அத்துடன் வெளிநாடுகளில் உள்ளோர். தமதுகிரடிட் காட்டின் மூலம் கட்டணங்களைசெலுத்தமுடியும்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar