BREAKING NEWS

அமெரிக்க‌ தூதுவ‌ரிட‌ம் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம். ச‌ல்மாவின் கூற்றில் முர‌ண்பாடுக‌ள்.



இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களை திருத்தவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று; நான் அமெரிக்க தூதுவரிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தனர்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்க தூதுவர் அதுல் கெஸாப் அவர்களை சில முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்ததாகவும் அதில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான திருத்தம் தேவையாகவுள்ளது என்றும் அதற்கு அமெரிக்கா  அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்; பிரதிநிதிகள்  அமெரிக்க தூதுவரை வலியுறுத்தியதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர்  டிவிட் செய்தி வெளியிடப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் பணிபுரிகின்ற ஜ}னைட் நளீமியும்  விமர்சனங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்து தெரிவித்திருந்தார்

இது தொடர்பாக சல்மா ஹம்சா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எனக்கு அமெரிக்க தூதரகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு  வந்தது.

அமெரிக்க தூதுவர் அவர்கள் எங்களை பி.ப. 2.00 மணிக்கு முஸ்லிம் சமூக பிரிதிநிதிகளை சந்திப்பதாகவும் அன்றைய தினம் இப்தார் ஏற்பாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்ட்டிருந்தது

அங்கு நான் சென்ற போது என்னைத் தவிர ஒரே அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் காணப்பட்டார்கள் மற்றும் கருத்தியல் வாதங்களில் ஒரே கருத்துள்ளவர்களும் காணப்பட்டார்கள்

அப்போது நான் அங்கிருந்த அமெரிக்க தூதரக இணைப்பாளரிடம் சென்று இது தொடர்பாக கூறினேன்.

அதற்கு அவர் இல்லை இது ஒரு பொதுவான கலந்துiராயாடல் கருத்துச் சுதந்திரம் மதிப்பளிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக விவாகரத்து தொடர்பாக அமெரிக்க தூதுவரிடம்   கருத்து தெரிவித்தவர்கள் சிலருடைய குற்றச்சாட்டு எமது இளம் வயது திருமணம் மற்றும் பலதார திருமணம் விவாகரத்து அதிகரித்து செல்லல் என்பன கூறப்பட்டு அவைகள் மாற்றப்பட வேண்டும் என்றார்கள் .அந்த விடயம் தொடர்பாக ; குறுக்கிட்டு  கருத்து தெரிவித்த நான் அவ்வாறு எல்லா விடயங்களையும் பொதுப்படையாக  பார்க்கப்பட முடியாது என்று தெரவித்தேன் . மற்றும் பெண் காழி நீதிபதி நியமனம் தொடர்பாகவும் எனது அதிருப்தியை வெளியிட்டேன் .

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar