BREAKING NEWS

அவர் ஒரு முன்னாள் போராளி.

நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்றும், கொலை வழக்கு ஒன்று தொடர்பாக இவர் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை இன்றிரவுக்குள் கைது செய்து விடுவோம் என்று யாழ். பிராந்திய காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

”இது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. நீதிபதியின் மெய்க்காவலருடன் முரண்பட்டுக் கொண்டே, குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அவர் ஒரு முன்னாள் போராளி. இன்றிரவுக்குள் அவரைக் கைது செய்து விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar