#றிஷாட் #பதியுதீனின் பிரதி தலைவர் A .m ஐமீல் ஆகியோரின் முயற்சிக்கு பலன் - சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை..!!
உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் #பைசர் #முஸ்தபா தெரிவித்துள்ளார்..!!
நடைமுறையில் 335 உள்ளுராட்சி சபைகள் காணப்படும் நிலையில், புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி அவை 336 ஆக உயர்த்தப்படவுள்ளன. இந்த நிலையில் பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை மற்றும் மாகாணசபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது..!!
இதனடிப்படையில் பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 486 இல் இருந்து 8 ஆயிரத்து 825 ஆக உயர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, உள்ளுராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்..!!
அத்தோடு கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதை தனியான நகர சபையாக பிரிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது..!!

Post a Comment