BREAKING NEWS

மினுவாங்கொடை வலய பாடசாலைகளிலும் வெள்ளிக்கிழமை டெங்கு சிரமதானம்



( மினுவாங்கொடை நிருபர் )   

   நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 28 ஆம், 29 ஆம், 30 ஆம் திகதிகளில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மினுவாங்கொடை வலயக் கல்விக் காரியாலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளிலும் இவ்வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, மினுவாங்கொடை வைத்தியசாலையின் பொது சுகாதார வைத்திய பிரதான அதிகாரி டொக்டர் சஷீ பிரியதர்ஷனீ  தெரிவித்துள்ளார்.
   இதன்பிரகாரம், எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு பதிலாக, பாடசாலைகளைச் சூழவுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் டொக்டர் தெரிவித்துள்ளார். 
   அன்றைய தினம், சிரமதானத்துக்குப் பொருத்தமான உடைகளை அணிந்து வர மாணவர்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர, சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் டொக்டர் தெரிவித்துள்ளார்.
   சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் இணைந்து இந்நடவடிக்கைகளை  முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் டொக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar