-எம்.வை.அமீர் -
கடந்தகால ஜனாதிபதி,
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகராக
கடமையாற்றிய இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக
சிந்தனையாளருமான அஷ்செய்க் அப்துல் காதர் மசூர்
மௌலானாவை முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் விடயத்தில் ஒத்துழைக்க வருமாறு முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில்
கிழக்குமாகாணத்திலிருந்து ஊடகவியாலாளர்கள் உள்ளிட்ட தூதுக்குழு ஒன்று முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விஜயராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில்
சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோது மேற்படி அழைப்பை
மகிந்த ராஜபக்ச விடுத்தார்.
கடந்தகால
ஆட்சியின் போது முஸ்லிம்கள் பாத்திப்புக்குள்ளானதாக கூறி ஆட்சிமாற்றம்
ஒன்றுக்கு ஒத்துளைத்திருந்த போதிலும் நல்லாட்சியை தரப்போவதாக கூறி ஆட்சிநடாத்திக்கொண்டிருக்கும்
தற்போதைய ஆட்சியிலும் கடந்தகாலத்தை விட அதிகமாக முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும்
கருத்துக்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
கடந்தகாலத்தில்
விடப்பட்ட தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு புதிய ஆட்சி அமையும் என்று
கருத்துத்தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்காலத்தில் முஸ்லிம்கள் விடயத்தில்
தன்னுடைய ஒருங்கிணைப்பாளராக அப்துல் காதர் மசூர் மௌலானாவை நியமித்து முஸ்லிம்கள்
விடயத்தில் மிகுந்த கருசனையுடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில்
சிறந்த ஆட்சி ஒன்றை அமைக்க இனம் மதம் என்ற விடயங்களைத் தவிர்த்து நாம் இலங்கையர்
என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றினையுமாரும் இங்கு கோரிக்கைவிடுத்தார்.
Post a Comment