( மினுவாங்கொடை நிருபர் )
அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலாகச் செல்லும் மற்றுமொரு அதிவேக நெடுஞ்சாலை, கடவத்தை - கெரவலப்பிட்டி பாதையில் ( ராகம - கொழும்பு பிரதான வீதிக்கு மேலாக ) தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த அதிவேக நெடுஞ்சாலை, 5 மேம்பாலங்களைக் கொண்டுள்ளதுடன், 4 வாகன ஓடு பாதைகளையும் கொண்டுள்ளது.
அரச வங்கியின் கடனுதவி மற்றும் சீன அரசாங்கத்தின் கடனுதவித்திட்டத்தின் கீழ், 9.6 கிலோ மீற்றர் நீளமுடையதாக மேற்கொள்ளப்படும் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் செயற்திட்டத்திற்கான மொத்தச் செலவு 77.7 பில்லியன் ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment