BREAKING NEWS

விமான நிலைய எல்லையில் சுற்றித்திரிந்த 16 பேர் கைது



( மினுவாங்கொடை நிருபர் )

சந்தேகத்திற்கிடமான முறையில் கட்டுநாயக்க -  விமான நிலைய எல்லைப் பிரதேசத்திற்குள் சுற்றித்திரிந்த 16 பேர், விமான நிலைய குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 
   குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர் ஒவ்வொருவருக்கும் தலா 1,500 ரூபா வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறு, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சீலனீ சத்துரந்தி பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
   விமான நிலைய  புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் அதிகாரி திசாநாயக்க ( 38226) வினால், இவ்வழக்கு நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar