BREAKING NEWS

சாய்ந்தமருதில் மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும் இளைஞர் மாநாடும்!!


சாய்ந்தமருதில் மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும் இளைஞர் மாநாடும்!!

எம்.வை.அமீர் -யூ.கே. காலித்தீன் 
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு வடிவமாக இன்று (11) மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும்  ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள "மக்கள் பணிமனையில்" இளைஞர்களுக்கான மாநாடும்  உள்ளுராட்சி மன்றத்தை நோக்கிய பயனத்திம் முன்னணி செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருதுமாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. பீர்முஹம்மட்முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத்இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத்முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். தில்சாத் ஆகியோர் உரையாற்றினார்.
இறுதியில்இளைஞர்களும் பொதுமக்களும் கைகோர்த்துசாய்ந்தமருது நகர மத்தியில் பாரிய மனிதசங்கிலிப் போராட்டம்ஒன்றையும் முன்னெடுத்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar