BREAKING NEWS

சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டார்


சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று (14) ஜனாதிபதியை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் அஸாத் சாலி தெரிவித்த தகவல்கள் வருமாறு

“சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். அதன் போது செயலாளர் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் ஒன்று உருவாக்குவத தொடர்பிலும் அதன் தேவைகள் குறித்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

பின்னர் ஜனாதிபதியைச் சந்தித்த போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார் என அஸாத் ஸாலி என்னிடம் தெரிவித்தார்.

 . – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar