கல்முனை, சாய்ந்தமருது பிரதேச சபைகள் சம்பந்தமாக கட்சிகளின் கருத்தை அறியும் கூட்டம்
இன்று மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தமிழ் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் திரு. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், கோடீஸ்வரன் உட்பட சுமார் பத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஹரீஸ் எம். பி மட்டும் கலந்து கொண்டார். தேசிய காங்கிரஸ் சார்பாக முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார். ஆசாத் சாலியும் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருது கல்முனை பிரச்சினையை கட்சிகளுடன் பேசி தீர்க்குமாறு ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இதனை தொடட்ந்து கல்முனையை நான்காக பிரிப்பதாயின் கல்முனையின் எல்லை என்பது தரவைக்கோவிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது. இதனை ஹரீஸ் மறுத்தார்.
அதே போல் அதாவுள்ளா தான் மெற்கொண்ட கல்முனையை நான்காக பிரிப்பது சம்பந்தமான திட்டத்தை முன் வைத்து அதனை ஹரீஸ் தடுத்தமையை சுட்டிக்காட்டினார்.
பலரதும் கருத்துக்கள் கேட்கப்பட்ட பின் தொடர்ந்தும் பேசுவது என தீர்மாணிக்கப்பட்டது.
கல்முனை சாய்ந்தமருது சம்பந்தமாக நடை பெற்ற கட்சிகளின் கூட்டத்தில் த. தே கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் உட்பட ஒரு பட்டாளமே வந்தது. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஹரீஸ் மட்டுமே வந்திருந்தார். இந்தளவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வங்குரோத்து கட்சியா? ஹக்கீம் ஏன் ஒழிந்து கொண்டார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.

Post a Comment