வெள்ளிக்கிழமை ஜும் ஆ நாளில் குத்பா நிகழ்த்தப்படுவது என்பது வெறுமனே ஒரு பிரச்சாரமாக மட்டும் கருதப்பட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. குத்பா என்பது பிரச்சாரம் மற்றும் வணக்கமாகும். குத்பாவில் என்ன பேசப்பட வேண்டும் என நபியவர்களால் வரையறுக்கப்படவில்லை. மாறாக குத்பா எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என வரையறை வகுத்துள்ளார்கள்.
ஒருவரின் குத்பா சுருக்கமாகவும் தொழுகை நீளமாகவும் இருந்தால் அது அவரது அறிவைக்காட்டும் என நபிகளார் சொல்லியுள்ளனர்.
அதே போல் குத்பாவுக்காக இமாம் மிம்பரில் ஏறுமுன் பள்ளிக்கு சமூகமளிப்பவருக்கு விசேட நன்மை கிடைப்பதாகவும் சொல்லியுள்ளனர். குத்பாவின் போது மவுனம் காத்தலும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இன்று இவற்றை கருத்திற்கொள்ளாமல் குத்பாக்கள் அதிக நேரமெடுப்பதால் மக்கள் தாமதமாக வர பழகி விட்டனர். 9 மணிக்கு பஸ் பயணிக்கும் என அறிவித்தல் கொடுத்தும் கடைசிப்பயணி 10 மணிக்கு வருவாரென்றால் அது வரை காத்திருக்கும் கொழும்பு கல்முனை தனியார் பஸ் போன்று குத்பாக்கள் ஆகிவிட்டன. நேர காலத்துடன் வந்தவன் பஸ்ஸுக்குள் வியர்க்க வியர்க்க இருப்பது போன்றுதான் இமாம் மிம்பரில் ஏறுமுன் வந்த தொழுகையாளியின் நிலை. குத்பாவின் மவுனம் காத்தல் என்பது குறட்டை சத்தம் கேட்பதாக ஆகிவிட்டது. பல குத்பாக்கள் ஏதோ சண்டைக்கு மக்களை அழைப்பது போன்று இரைச்சல் ஆகி விட்டன.
எனவே தான் குத்பாக்கள் 15 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என உலமா கட்சி அடிக்கடி சொல்லி வருகிறது.
Mubarak Moulavi

Post a Comment