BREAKING NEWS

மேம்பாலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இராஜகிரிய, கனேமுல்ல மேம்பாலங்களின் பணிகள் பூர்த்தி



( மினுவாங்கொடை நிருபர் )

   கொழும்பு மற்றும் கம்பஹாவை அண்மித்துள்ள பிரதேசங்களில் ஏற்படும் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் 18 மேம்பாலங்களை விரைவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆரச்சி தெரிவித்துள்ளார். 
   இத்திட்டத்தின் கீழ், கொழும்பு மாவட்டத்தில் இராஜகிரிய,  கிருலப்பனை, கொம்பனி வீதி,  பாலத்துறை மற்றும் ஆமர் வீதி ஆகிய இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் கனேமுல்ல, வத்தளை,  நிட்டம்புவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களிலும் மேம்பாலங்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
   கொழும்பு மாவட்டத்தில் இராஜகிரிய மற்றும் கம்பஹா மாவட்டத்தில் கனேமுல்ல ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலங்களின் பணிகள், இதுவரை எண்பது வீதம் பூர்த்தி அடைந்துள்ள நிலையில், ஏனைய மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிஹால் சூரிய ஆரச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar