சாய்ந்தமருதில் உள்ள ஹரீஸ் எம் பியின் வீட்டுக்கு கல் எறிந்து தாக்க முயற்சித்தமை கண்டிப்புக்குரியதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
சாய்ந்தமருது பிரதேச மக்களின் தாகம் நியாயமானதாகும். ஆனால் அவர்களால் கடந்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட கட்சி அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டது. இது விடயத்தில் பிரதி அமைச்சர் ஹரீசும் அரசியல் அறிவோ, நுட்பமோ இல்லாமல் மக்களை குழப்பிவிட்டார் என்பதும் உண்மையாகும். அத்துடன் தமது பிரதேச அரசியல்வாதிகளை தேர்தல் மூலம் தோற்கடிக்கச்செய்வதன் மூலம் மட்டுமே சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையின் நியாயத்தை அரசுக்கு உணர்த்த முடியும் என்பதை உலமா கட்சி 2010 முதல் சொல்லி வருகிறது. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றுக்கட்சி என தெரிந்து கொண்டே சாய்ந்தமருது மக்கள் ஏமாறி விட்டனர். நாம் பல தடவைகள் அம்மக்களை பகிரங்கமாக எச்சரித்தோம்.
இந்த நிலையில் ஆத்திரப்பட்ட மக்கள் ஹரீசின் மீதுள்ள ஆத்திரத்தில் அவரது வீட்டைத்தாக்க முயற்சித்தமை நல்ல செயல் அல்ல.
ஹரீஸ்தான் சாய்ந்தமருது மக்களின் எதிரியே தவிர அவரது குடும்பம் அல்ல. வீட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு அனாவசிய அச்சத்தை உண்டாக்கும் செயலை சாய்ந்தமருது பள்ளிவாயலும் உலமாக்களும் கண்டிக்க வேண்டும்.
நாம் முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்காத போதும் அரசியலுக்காக வன்முறையை கையில் எடுப்பதை கண்டிப்பவர்கள். அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் மர்ஜான் அதாவுள்ளா ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட போதும் நாம் அதனை கண்டித்தோம்.
ஆகவே முஸ்லிம்கள்
நமது இலக்கு என்பது முஸ்லிம்களின் வாக்குகளை மது, மாது, சூதுவிக்காக விற்று ஏப்பமிடும் முஸ்லிம் காங்கிரசை சாய்ந்தமருதிலிருந்தும் கல்முனையிலிருந்தும் முழு அம்பாரை மாவட்டத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும்
விரட்டுவதாகவே இருக்க வேண்டும். மாறாக ஹரீசோ ஜவாதோ எமது எதிரிகள் அல்ல. முஸ்லிம் காங்கிரசை கல்முனை தொகுதி மக்கள் விரட்டி விட்டால் அதில் உள்ளவர்கள் நல்ல அரசியல் கட்சியின் பக்கம் நாளை வருவார்கள்.
முபாறக் மௌலவி
- உலமா கட்சித்தலைவர்

Post a Comment