BREAKING NEWS

SLMC மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை - சுயேட்சையாக போட்டி


SLMC  மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் சுயேட்சையாக போட்டி
---------------------------------------------------------------------------
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய பிரதேச சபைகளில் சயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வாகரை பிரதேச சபையில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை வாகரை பிரதேச சபைகளில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சையாக போட்டியிட இன்று(20.12.2017) புதன்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய தேர்தலுக்கான முகவரை சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காததால் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்து கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

எனினும் மழையுடன் கூடிய கால நிலை நிலவியதால் அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஹெலி கொப்டரில் மட்டக்களப்புக்கு குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாத நிலையில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வாகரை பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியது.

இதனால் சிரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபையிலும்  ஓட்டமாவடி பிரதேச சபையிலும் வாகரை பிரதேச சபையிலும் சுயேட்சையாக போட்டியிட இன்று புதன்கிழமை கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான கட்டுப்பணத்தினை எஸ்.எச்.அஜீஸ் மற்றும் வாகரை பிரதேச சபை மற்றும் ஓடடமாவடி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினை எம்.றமீஸ் ஆகியோர் செலுத்தியுள்ளனர்.

இன்று புதன்கிழமை 20.12.2017 நண்பகள் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால முடிவடைந்துள்ளது. அதே போன்று வேட்பு மனுப்பத்திரம் தாக்கல் செய்யும் காலம் வியாழக்கிழமை (21.12.2017) நண்பகள் 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by OddThemes - Videopiar