BREAKING NEWS

இன மத பேதம் ஏற்படுத்தும் பச்சோந்திகளாக பல அரசியல்வாதிகள்;


ஏறாவூர் ஸம் ஸம் ஸகாத் கிராம வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ
--------------------------------------------------------------------

இந்த நாட்டில் இன மத பேதங்களை ஏற்படுத்தி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி நிறம்மாறித் திரியும் பச்சோந்திகளாக பல அரசியல்வாதிகள் இருப்பதாக வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அப்படியானோர் பலாத்காரமாக இப்தார் நிகழ்விலும் கலந்து கொள்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செமட்ட செவண' (அனைவருக்கும் நிழல்) திட்டத்தின் கீழ் ஏறாவூரில் 43 நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிக்கும் நிகழ்வு  (28) வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முடிவதற்குள் இருநூறு வீடமைப்பு மாதிரிக்கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்இ

இனஇ மதஇ மொழி பிரதேச வேறுபாடுகளை ஏற்படுத்தி இந்த நாட்டுக்குத் தீவைத்து அரசியல் பிழைப்பு நடாத்துபவர்கள் இருக்கின்றார்கள். மக்களால் விரட்டப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இனியும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை. இந்த நாட்டுக்குத் தீ வைப்பவர்கள் இனி ஒரு போதும் தேவையே இல்லை என்றும் அவர் கூறினார்.

43 நிரந்தர வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடங்கலாக ஸகாத் கிராமம் மற்றும் ஸம்ஸம் கிராமம் ஆகிய பெயர்களில்; ஏறாவூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை உள்ளடக்கிய மாதிரிக் கிராமம் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (28) வெகு கேலாகலமாக நடைபெற்றது.

வீடமைப்புத்துறை  அமைச்சர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீர்அலி செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் முன்னாள் மாகாண அமைச்சர் எம்ஸ். சுபைர் மற்றும் நகர முதல்வர் ஐ. அப்துல் வாசித்  பிரதேச சபை தவிசாளர் கதிரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் 43 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம் பயனாளிகள் 170 பேருக்கும் மொத்தமாக 85 இலட்சம் ரூபாய் வீடமைப்புக் கடன் மற்றும் உதவி வழங்கல் பயனாளிகள் 70 பேருக்;கு 'விசிரி' திட்டத்தின் கீழ்  தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடன்களுக்கான காசோலை வழங்கல் பயனாளிகள் 25 பேருக்;கு 'சொந்துரு பியச' எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன் வழங்கல்இ 'சில்ப சவிய' எனும் திட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி பயிலுநர்கள் 50 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குதல் மேலும் கண்பார்வைக் குறைபாடுள்ள 258 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதோடு பயனாளிகள் இருவருக்கு காணி உரிமைப்பத்திரம் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100 வீட்டுத் திட்டங்களைத்தான் அமைப்பது என்று ஏற்கெனவே எனக்குள் இருந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த வீடமைப்பு இலக்கை இருமடங்கு அதிகரிக்கத் தீர்மானிததுள்ளேன்.'

'நான் செய்வதைத்தான் சொல்வேன் சொன்னதைச் செய்வேன். ஏனென்றால் என் தந்தையும் அவ்வாறே செயற்பட்டவர்.'

'எனது வேகத்திற்கு ஈடுகொடுத்து எவரும் சரி சமனாகவும் ஓட முடியாது என்னை எட்டிப் பிடிக்கவும் முடியாது.'

கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க வடிச்சல் கிராமத்தில் 50 உறுகாமம் கிராமத்தில் 75 வீடுகளும் அடுத்த மாதம் 28 ஆம் திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்படும். அதே போல ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க சவுக்கடி 50 களுவங்கேணி 25 ஐயன்கேணி 25 பிரதேசத்திற்கும் 100 வீடுகள் என எதிர்வரும் 25 ஆம் திகதி இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படும்.

ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தி சாத்தியவள அறிக்கை தயாரித்து பத்திரங்களைச் சமர்ப்பித்து காலத்தை வீணாக்க வேண்டியதில்லை. வீடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் திகதியை மட்டுமே அதிகாரிகளிடம் கேட்டு தீர்மானித்துக் கொண்டுள்ளேன் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar