BREAKING NEWS

கலாபூஷணம் விருது பெறும் பிராந்திய ஊடகவியலாளர்



    மினுவாங்கொடையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான ஐ. ஏ. காதிர் கான், அரச கலாபூஷணம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார். 
   2018 ஆம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,  கொழும்பு தாமரை தடாக அரங்கில், (29) செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின்போதே, சிரேஷ்ட ஊடகவியலாளரான இப்றாஹீம் அப்துல் காதிர் கான், விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார். 
   மெளலவி (அரபிக்) டிப்ளோமா (1981),  ஊடகத்துறை டிப்ளோமா (2000), சுற்றாடல் ஊடகத்துறை டிப்ளோமா (2001)  ஆகிய டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுள்ள காதிர் கான், ஊடக சேவையில் (1981 முதல்) 35 ஆண்டுகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar