BREAKING NEWS

நிதி, ஊடகத் துறை அமைச்சுக்களில் மாற்றம் : புதிய வர்த்தமானி வெளியீடு



( மினுவாங்கொடை நிருபர் )

   நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையடுத்து, புதிய அமைச்சுக்களுக்கான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய  விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
   இம் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்,  மேற்படி இவ்விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிணங்க,  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்த ஊடகத்துறையோடு இணைந்த விடயங்கள் மற்றும் திணைக்களங்கள், நிறுவனங்கள் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சரவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
    தகவல் திணைக்களம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் (லேக்ஹவுஸ்) ஆகியன அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சின் கீழ்,  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 
   இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சராக,  அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவன் விஜேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
   இந்நிலையில்,  அமைச்சரவை அந்தஸ்தற்ற விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் கிராமிய புத்தெழுச்சி நிதியம், மக்கள் ஊக்குவிப்பு நிதியம் ஆகிய நிறுவனங்கள்,  விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar