BREAKING NEWS

மூதூர் தள வைத்தியசாலை தரமுயர்த்தப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.


மூதூர் தள வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மிக விரைவில் மூதூர் தள வைத்தியசாலை தரமுயர்த்தப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.
(ஆளுநர் ஊடகப்பிரிவு)
யுத்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு பல்வேறு அடிப்படை தேவைகளுடன் இயங்கும் திருகோணமலை மூதூர் வைத்தியசாலையின் அத்தியவசியத் தேவைகள் மிக விரைவில் தீர்க்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு காணப்படும் பல்வேறு தேவைகள் குறித்து ஆராய்ந்ததுடன் அங்கு காணப்படும் நிலை குறித்தும் கண்டறிந்து கொண்டனர்.
இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar