BREAKING NEWS

தேசிய, சர்வதேச உதவிகளைப் பெற்று குறித்த தீவிரவாத செயற்பாட்டை முறியடிக்க வலுவாக உறுதிப்பூணுவோம்

தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருந்தாலும், எனக்கு அறிவிக்கவில்லை

இந்த நிமிடம் நாட்டுக்குள் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, நாட்டை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சிப்பார்களாயின், தேசிய, சர்வதேச உதவிகளைப் பெற்று குறித்த தீவிரவாத செயற்பாட்டை முறியடிக்க வலுவாக உறுதிப்பூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருந்தாலும், அது தொடர்பில் தனக்கும் அமைச்சர்களுக்கும் அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம்  தொடர்பில் போதிய அவதானம் செலுத்தப்படாமைக் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தான் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இது குறித்து அறிவிக்காமை அதில் உள்ளடங்கும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar