தற்கொலை தாக்குதலின் பின்னணி
சஹ்ரானின் மனைவி என்ன சொல்கிறார்
சிங்களத்தில்: ஸ்ரீநாத் பிரஸன்ன ஜயசூரிய , லங்காதீப வார இதழ்
தமிழ்: ஏ.எல்.எம். சத்தார்
தேசிய தௌஹீத் ஜமாஅத் முக்கியஸ்தர்களில் சிலர் சாய்ந்தமருதுவில் தங்கியிருந்து வீட்டை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைத்த போது அதில் இருந்த ஆண், பெண், சிறுவர்கள் உள்ளிட்ட 16 பேர் குண்டு வெடிப்பில் பலியாகினர். அவர்களில் பெண்ணொருவரும் அவரின் சிறிய மகளும் உயிர்தப்பினர். சிறு காயங்களுக்குள்ளான இவர்கள் இருவரையும் இராணுவத்தினர் முதலுதவி சிகிச்சை வழங்கி உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் தேறியுள்ளனர்.
குணமடைந்த தாயும் சேயும் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் எனக் கூறப்படும் மொஹம்மட் காஸிம் மொஹம்மட் சஹ்ரானின் மனைவியும் மகளுமாவார்கள்.
சஹ்ரானின் மனைவியான 24 வயதுடைய அப்துல் காதர் பாத்திமா சாதியாவிடம் அம்பாறை பொலிஸ் தலைமையக அதிகாரிகள் நீண்ட விசாரணைகளை நடத்தினர். அதன் போது அவர் வெளியிட்ட தகவல்கள்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் ஒரு தினத்தில் தற்கொலை குண்டுதாரிகள் கறுப்பு நிறத்திலான நீண்ட மேலங்கியை அணிந்தவாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இது கொழும்பில் வாடகைக்கு எடுத்துக்கொண்ட சொகுசு வீட்டுத்தொகுதியில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அமைப்புக்கு கொழும்பிலுள்ள குபேரர் ஒருவரால் அவ்வப்போது பெருந்தொகையான பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்துக் கோயில் ஒன்றுக்குள்ளும் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ள திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.
சஹ்ரான் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத்துடன் ஈடுபாடு காட்டிக்கொண்டிருந்தபோது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைக் கடுமையாக விமர்சித்து வந்தார். பின்னர்தான் இதில் இணைந்துள்ளார்.
தொடர்ந்து சஹ்ரானின் மனைவி சாதியா தன்னை அறிமுகம் செய்த போது,
நான் குருநாகல் நாரம்மலயில் பிறந்தேன். தரம் 9 வரையே பயின்றுள்ளேன். எனக்கு இரு சகோதரிகளும் நான்கு சகோதரர்களும் உள்ளனர். எனது தந்தை மொஹம்மத் ஹுசைன் அப்துல் காதர் – தாய் யாஸின் சித்தி சஹிலா. தாய்க்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். தாயின் இளைய சகோதரி மொஹம்மட் இப்ராஹிம் நௌபர் மௌலவி என்பவரை மணமுடித்துள்ளார். இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்.
சஹ்ரான் காத்தான்குடி தாருல் அதர் பள்ளியில் பணிபுரிந்துள்ளார். இதனால் சமய பிரசாரப் பணியில் ஈடுபடும் நௌபர் மௌலவியுடன் சஹ்ரான் எனது வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பள்ளிக்கு பிரசாரப் பணிக்காக வந்தார். அப்பள்ளி மத்ரஸாவில் குர்ஆன் ஓதுவதற்காக நான் செல்வேன். அப்போது என்னைக் கண்டு அவர் மண முடிக்க விரும்பினார். எனக்கு 11 வயது என்பதால் எனது பெற்றோர் அதனை நிராகரித்துள்ளனர். 2009 இல் சஹ்ரான் ஜப்பான் நாட்டுக்குச் சென்றுள்ளதாக நெளபர் மௌலவியூடாக தெரிந்துகொண்டேன். அங்கிருந்து மூன்று மாதங்களில் திரும்பிவந்து, இனிப்பு வகைகளுடன் அழகிய ஆடையொன்றும் கொண்டு வந்து தந்தார்.
2009 மே மாதம் 30 ஆம் திகதி எனக்கும் சஹ்ரானுக்கும் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு 14 வயது. தாருல் அதர் பள்ளி நிர்வாகத்துடன் கருத்து மோதல் ஏற்பட்டு சஹ்ரான் பள்ளி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் ஒன்றை சஹ்ரான் நிறுவினார்.
இந்த அமைப்பு ஆரம்பிக்க முன்னர் சஹ்ரான் நல்ல குணவியல்புடன் காணப்பட்டார். அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலே அவர் இருந்தார். சமய கிரியைகள் தொடர்பான சஹ்ரானின் கருத்து முரண்பாட்டினால் பலர் இவருடன் பகைத்துக்கொண்டனர். சஹ்ரான் தனது கொள்கைப் பிரசாரத்திற்காக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று வந்தார்.
எனது தலைமகன் 2011 ஒக்டோபர் 30 ஆம் திகதி குருநாகல் வைத்தியசாலையில் பிறந்தார். பின்னர் எனது இளைய மகளும் 2015 ஜூலை 7 ஆம் திகதி குருநாகல் வைத்தியசாலையில் பிறந்தார். இந்த மகள் தான் குண்டு வெடிப்பில் என்னுடன் காயங்களுக்குள்ளானவர். நௌபர் மௌலவியும் எனது சிறிய தாயாரும் கட்டார் நாட்டிலிருந்து வந்தபின்னர் நாரம்மலயில் குடியேறியிருந்தனர்.
சஹ்ரான் முன்னர் நெளபர் மௌலவியுடன் மனஸ்தாபப்பட்டிருந்தார். கட்டாரிலிருந்து நௌபர் மௌலவி இங்கு வந்த பின்னர் நோன்பு மாதம் ஒன்றில் இருவரும் ஒற்றுமையாகினர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து பிரசாரப் பணிகளில் ஈடுபடுவது குறித்து ஸஹ்ரானுடன் வினவிய சந்தர்ப்பங்களில் அவர் என்னுடன் கடும் கோபப்படுவார். எனது பாட்டில் இருக்கும்படி எச்சரிப்பார். ஸஹ்ரான் முகநூல் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் நடவடிக்கைகள், தகவல்களைத் தேடிப்பார்ப்பார். அவற்றின் காட்சிகளை எனக்கும் காண்பிப்பார். தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறீர்களே உங்கள் செயற்பாடுகளால் எனக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படும். எனவே இதனை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று நான் எச்சரிக்கை விடுத்திருக்கிறேன். இச் சந்தர்ப்பத்திலும் அவர் கடும் கோபத்தையே வெளிப்படுத்தினார். எனது பேச்சு எதனையும் அவர் பொருட்படுத்தவில்லை. அவரது தம்பி ரிழ்வான் அடிக்கடி வந்து ஸஹ்ரானைச் சந்திப்பார். வீட்டுத் தோட்டத்தில் சென்று இரகசியமாக உரையாடுவார்கள். அவை என்னவென்பது எனக்குத் தெரிவதில்லை.
நான் காத்தான்குடிக்குப் போன சந்தர்ப்பங்களில் தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிக்குச் செல்வேன். அங்கு ஸஹ்ரான் சமய போதனை புரிவார். அங்கு சுமார் 100 ஆண்களும் 25 பெண்கள் அளவிலுமே வருவர். அங்கு சமய போதனைகளே இடம்பெற்றன. ஸஹ்ரான் போகும் இடம் எதனையும் என்னிடம் சொல்வதில்லை. அவர் நீண்ட நாட்கள் எங்கள் நாரம்மல வீட்டுக்கு வரமாட்டார். பிள்ளைகள் வாப்பாவைத் தேடி அழுவார்கள். ஊராரும் என் பெற்றோருக்கு ஸஹ்ரானை எனக்குக் கட்டிக்கொடுத்ததற்காகத் திட்டுவார்கள். ஸஹ்ரானின் இந்நடவடிக்கைகளால் நான் அவரிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காகக் கேட்டாலும் அதற்கும் அவர் மறுப்புத் தெரிவிப்பார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஸஹ்ரானையும் நௌபர் மௌலவியையும் தேடி சி.ஐ.டி யினர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் போகும் இருக்கும் இடம் எதுவும் எமக்குத் தெரியாது என்றே நான் உண்மையைக் கூறினேன். தெரிந்தாலும் கூறியிருந்தால் நான் அவர்களால் கொல்லப்படுவேன் என்பதனையும் நான் அறிவேன்.
ஜனவரி மாதம் ஒருநாள் இரவு ஸஹ்ரான் எங்கள் வீட்டுக்கு வந்தார். துணிப் பையொன்று நிறைய இலட்சக்கணக்கான பணத்துடன் காணப்பட்டார். இவ்வளவு தொகைப்பணம் எப்படிக்கிடைத்தது என்று வினவினேன். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு உதவும் பெரிய வர்த்தகர் ஒருவர் இலங்கையில் உள்ளார். அவர் இவ்வமைப்பின் பணிகளுக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறார் என்றார். மறுநாள் காலை அவர் குறித்த பணப் பையுடன் வீட்டிலிருந்தும் வெளியேறினார். அவர் எங்கிருந்த போதிலும் அவ்வப்போது வீட்டு செலவுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருப்பார்.
நீர்கொழும்புப் பகுதியில் வாடகைக்கு எடுத்த வீடொன்றில் நாம் சிறிது காலம் இருந்தோம். அங்கிருந்தபோதும் அவர் அடிக்கடி வெளியே போய்வருவார். அப்போது கேட்கும் போதெல்லாம் ஐ.எஸ்.ஐ.எஸ் பணிகளுக்காகவே போவதாகக் கூறுவார். மார்ச் 29 அல்லது 30 ஆம் திகதி என்று நினைக்கிறேன். காத்தான்குடியிலிருந்து ஸஹ்ரானின் தம்பி ஸைனி என்பவர் எமது நீர்கொழும்பு இல்லத்திற்கு வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நாம் கொழும்பில் வீடொன்று வாடகைக்கு எடுத்திருக்கிறோம். அங்கு செல்லத் தயாராக இருக்கும்படி ஸஹ்ரான் என்னிடம் கூறினார்.
சாரா ஹஸனுடன் அபூ அப்துல்லாஹ் செலுத்தி வந்த வெள்ளை வேனுடன் ஸஹ்ரானும் நானும் இரண்டு பிள்ளைகளும் கொழும்புக்குச் சென்றோம். இது எந்த இடம் என்று நான் சாரா ஹஸனிடம் வினவினேன். இது லிபர்ட்டி பிளாஸாவில் 5 ஆம் மாடியில் இருக்கிறோம் என்று சாரா கூறினார்.
மூன்று அறைகளுக்கும் மாதாந்த வாடகையாக 140000/= ரூபா என்றும் அவர் கூறினார். எமது குடும்பமும் சாராவும் அவரது கணவர் ஹஸனும் மூன்று அறைகளிலும் தங்கியிருந்தோம். அபூ அப்துல்லாஹ் முன்சாலையில் இருந்தார். பின்னொரு நாள் ஸஹ்ரானின் இன்னொரு சகோதரரான ரிழ்வானும் மற்றுமொருவரும் எமது இருப்பிடம் வந்தனர். ரிழ்வானை நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் கண்டேன். ரிழ்வானின் வலது கையில் சீனி விரலைத் தவிர ஏனைய விரல்கள் அகற்றப்பட்டிருப்பதை அவதானித்தேன். இடது பக்க கண் அருகே காயப்பட்ட தழும்பு ஒன்றும் காணப்பட்டது. காத்தான்குடியில் ஓரிடத்தில் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது அது தவறி வெடித்ததால் ஏற்பட்ட வடுக்கள் என்று சாரா என்னிடம் விளக்கினார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறச்சென்றால் காரியம் அம்பலமாகி விடும் என்ற அச்சத்தில் கொழும்பு வைத்தியசாலையில் சுமார் இரண்டு மாதங்கள் அளவில் சிகிச்சை பெற்று வெளிவந்துள்ளார். அஸாத் என்பவர் அவர் அருகே உதவிக்கு இருந்துள்ளார் என்று சாரா கூறினார். நீங்கள் எல்லோரும் பெண்களான எங்களை விட்டு வெளியே போய் இரண்டு மூன்று நாட்களின் பின்னர் இங்கு வருகிறீர்கள் என்று நான் ஸஹ்ரானிடம் விசனம் தெரிவித்தேன். அது பற்றிக் கேட்கக்கூடாது என்று கடும்தொனியில் கூறினார். அப்படியானால் என்னையும் இரு பிள்ளைகளையும் எனது தாய் வீட்டில் விடும்படி மீண்டும் கேட்டுக்கொண்டேன். வீட்டுக்குப் போகும் பேச்சை என்னிடம் முறையிடவேண்டாம் என்று கண்டிப்பாகக் கேட்டுக்கொண்டார். உங்களைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியும் என்றும் கூறவே நான் மௌனியானேன்.
ஏப்ரல் 18 ஆம் திகதி ஆஸாதையும் பெரோசாவையும் காத்தான்குடிக்குக் கூட்டிச் செல்வதாக ஸஹ்ரான் புறப்பட்டார். நானும் இரு பிள்ளைகளும் சாராவுமே லிபர்ட்டி பிளாஸா அறையில் இருந்தோம். அன்று இரவு ஸஹ்ரானும் அபூ அப்துல்லாஹ்வும் வேன் ஒன்றில் லிபர்ட்டி பிளாஸாவுக்கு வந்தனர். ஸஹ்ரான் நீண்ட நேரம் இரு பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடியும் வேடிக்கை காட்டிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அன்று இரவு ஸஹ்ரான் என்னிடம் “நான் ‘ஜிஹாத்’ ஆகப் போகிறேன். நான் இறந்த பின்னர் நீங்கள் நான்கு மாதங்கள் ‘இத்தா’ அனுஷ்டிக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். இப்படியொரு பயணம் போவதென்றால், ஏன் நீங்கள் என்னை இங்கு அழைத்து வந்தீர்கள்? என்று நான் கேட்டேன். என்னை எனது தாய் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று மீண்டும் கேட்டபோதும் ஸஹ்ரான் அதற்கு செவி சாய்க்கவில்லை. அப்போதும் நான் அவரிடமிருந்து விவாகரத்துக் கோரினேன். உங்களைப் பாதுகாக்க நான் எனது தாயாரிடம் ஒப்படைக்கிறேன் என்று ஸஹ்ரான் கூறிவிட்டார். என்னைப் போன்றே அஸாதும் ஹஸனும் ஜிஹாத் ஆகிறோம். அப்படியிருந்தும் அவர்களது துணைவியர்களான சாராவும், பெரோஸாவும் விவாகரத்துக் கோரவில்லையே என்று ஸஹ்ரான் என்னைக் கேட்டார்.
லிபர்ட்டி பிளாஸா வீட்டிலிருந்து நாம் எல்லோரும் பாணந்துறையிலுள்ள வீடொன்றுக்கு வேனில் சென்றோம். அங்கு ரிழ்வானும் இருந்தார். பாணந்துறை வீட்டில் 10 வாலிபர்கள் அளவில் இருப்பதாக எனது மகன் என்னிடம் கூறினார். பாணந்துறையிலிருந்து நிந்தவூர் நோக்கிப் புறப்பட்டோம். வேனுக்கு ஏறு முன்பே ஸஹ்ரான் என்னிடமிருந்த கைப்பேசியைக் கைப்பற்றிக்கொண்டார். வீட்டுக்குப் போகும் முன்னர் எனக்கு வெள்ளை ஆடை வாங்குவதற்காக ஸஹ்ரான் 35000/= ரூபா பணம் தந்தார். அத்துடன் மகனின் கையில் 6000/= ரூபாவையும் மகளுக்கு 5000/= ரூபாவையும் கொடுத்தார். சோகம் தாங்க முடியாது நான் கண்ணீர் சிந்தினேன். சாராவும், பெரோஸாவும் அவ்வளவாக அழவில்லை. வேனின் டிக்கியைத் திறக்க வேண்டாம். அதில் பணப் பையொன்று உள்ளது என்று கூறினார். நானும் இரு பிள்ளைகளும் முன்பக்க ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம். சாராவும் பெரோஸாவும் பின் பக்க ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.
நான், சாரா, பெரோஸா மூவரும் புர்கா அணிந்தவாறே பயணித்தோம். ரிழ்வானும் எம்முடன் வந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பல கடைகள் மூடியிருந்தன. பின்னர் கிரிஉல்லயில் திறந்திருந்த ஒரு புடைவைக்கடையைக் கண்டு வாகனம் நிறுத்தப்பட்டது.
நானும் பெரோஸாவும் சாராவும் டிரைவருடன் கடைக்குச் சென்றோம். எனது மகளை சாரா தூக்கிக்கொண்டு வந்தார். அக்கடையில் வெள்ளை நிற ஸ்கர்ட் இரண்டு, ஒரு பிரஷியர், இரண்டு பிலவ்ஸ்கள் என்று வாங்கினோம். சாராவுக்கு வெள்ளை நிற சாயா இரண்டும் சட்டை மூன்றும் பிரஷியர் இரண்டும் வாங்கினோம். பெரோஸாவுக்கு வெள்ளை நிற ஸ்கர்ட் நான்கு, பிலவுஸ் நான்கு, பிரஷியர் இரண்டும் வாங்கிக் கொண்டோம். மகளுக்கு விளையாட்டுப் பொருளும் வாங்கிக் கொடுத்தோம். இவையனைத்துக்கும் 29000 ரூபா பணம் செலுத்தினோம்.
பயணம் தொடர்ந்தது. அட்டாளைச்சேனையை அடைந்து அங்குள்ள வீடொன்றுக்குச் சென்றோம். அங்கு தேநீர் அருந்தி விட்டு, பெரோஸாவையும் சாராவையும் அங்கு நிறுத்தி விட்டு, நானும் எனது இரு பிள்ளைகளும் ரிழ்வானின் மனைவியும் அவர்களது இரு பிள்ளைகளுமாக நாம் எல்லோரும் சாய்ந்தமருதுவிலுள்ள ஒரு வீட்டுக்குச் சென்றோம். ஏப்ரல் 21 ஆம் திகதி மு.ப.11.30 மணியளவில், எமது ஆட்கள் தற்கொலை தாக்குதல் செய்து கொண்டதாக ரிழ்வானின் மனைவி நப்னா கூறினார். அத்துடன் வெள்ளை ஆடையையும் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
நான் வாங்கி வந்த வெள்ளை உடையை உடுத்து அதன் மேலால் கறுப்பு அங்கியையும் அணிந்து கொண்டேன்.
22 ஆம் திகதி பகல் உணவுக்காக நிந்தவூரில் உள்ள வீட்டுக்கு நியாஸ் கொண்டு வந்த வேனில் சென்றோம். ஸஹ்ரானின் தாயார் என்னைக் கட்டியணைத்துக்கொண்டு அழுதார். ஸஹ்ரான் என்னையும் பிள்ளைகளையும் அநாதையாக்கிவிட்டுச் சென்று விட்டாரே என்று கவலைப்பட்டேன். அதனைக் கேட்டு, “பயப்பட வேண்டாம் நாம் இருக்கிறோம்” என்று ஸஹ்ரானின் தாயார் எமக்கு ஆறுதல் கூறினார். அன்று இரவை நிந்தவூர் வீட்டிலே கழித்தோம். 23 ஆம் திகதி காலையில் அட்டாளைச்சேனை வீட்டிலே தங்கியிருந்த சாராவையும் பெரோஸாவையும் கூட்டிக்கொண்டு நியாஸ் நிந்தவூர் வீட்டுக்கு வந்தார். அவர்கள் இருவரும் வெள்ளை உடை உடுத்து மேலால் கறுப்பு நிற அபாயாவை அணிந்திருந்தனர். நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாம் இருவரும் சந்தோசமாக இருக்கிறோம் அவர்கள் போகவேண்டிய இடத்திற்குச் சென்று விட்டார்கள் என்று பெரோஸாவும் சாராவும் என்னைத் தேற்றினர்.
தற்கொலை குண்டுதாரிகள் எனது கணவருடன் லிபர்ட்டி பிளாஸாவிலிருந்து சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் வீடியோவை கைப்பேசியூடாக சாரா எனக்குக் காட்டினார். அதில் ஸஹ்ரான் முகம் திறந்த நிலையில் ஏனையோர் முகம் மூடியிருப்பதையும் கண்டேன் என்று ஸஹ்ரானின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கட்டுரை மூலம் விடிவெள்ளிப் பத்திரிகை

Post a Comment