BREAKING NEWS

2020 இன் ஜனாதிபதி யார்? இலங்கையின் பிரபல ஜோதிடர் கூறியது


எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்கின்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது.

இம்முறை இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

அதிலும் மிக முக்கிய வேட்பாளர்களாக சஜித், கோத்தபாய மற்றும் அனுர குமார ஆகியோர் பேசப்படுபவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையின் பிரபல ஜோதிடர் சுஜித் நிஷாந்தா அவர்கள் சஜித்தே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த ஜோதிடர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வருவார் என கூறியிருந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவே அரசதலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar