BREAKING NEWS

கோத்தாவும் அநுரகுமாரவும் 25 இல் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட, 1 ம் திகதி சஜித் அறிவிக்கிறார்

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வெளியிடப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

-JM

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar