BREAKING NEWS

ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை எனது கொள்கையுடன் ஒத்துச் செல்கின்றது- சஜித் பிரேமதாச

ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை எனது கொள்கையுடன் ஒத்துச் செல்கின்றது- சஜித்

ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான கொள்கைகளுடன் எனது கொள்கையும் ஒத்துச் செல்வதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒருமித்த நாட்டுக்குள் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய  நிலை வழங்கப்பட்டு அவை பாதுகாக்கும் ஏற்பாடுகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க அங்கம் வகிக்கும் ஜனாதிக ஹெல உருமய கட்சியின் தேசிய மாநாடு நேற்று கொழும்பு  கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஒருமித்த நாடு அனைவருக்கும் உரித்துடையதாக்கப்படும், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவது  உறுதிப்படுத்தப்பட்ட விடயம் இருப்பினும் ஏனைய இனத்தவர்களுக்கும், அவரவர் பின்பற்றும் மதங்களுக்கும் உரிய  நிலையினை  வழங்குவதுடன்  அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆகவே ஐக்கிய தேசிய கட்சியும்,    ஜாதிகஹெல உருமயும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றறேன்.
அரச நிருவாகத்தை  மக்களே தீர்மானிக்கும் யுகம் எதிர்காலத்தில் தோற்றுவிக்கப்படும் எனவும் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar