இன்னும் ஏன் கல்முனை மாநகர சபைக்கு கடந்த 2 மாதங்களாக பிரதி முதல்வர் நியமனம் செய்யவில்லை???
ஏதாவது காரணங்கள் இருக்கலாம் இருந்தும் சில விடையங்களை சொல்ல முயற்சிக்கிறேன்.
கல்முனை மாநகர சபை 2006ம் ஆண்டு பிரகடனம் செய்யற்பட்டதில் இருந்து கல்முனையை சேர்ந்த அஸ்மி, ஹரிஸ், நிஸாம் காரியப்பர் போன்றோறை தவிர யாருக்கும் இது வரை முதல்வர், பிரதி முதல்வர் வழங்காமைக்கு வழங்காமைக்கு காரணம் என்ன???
மாநகர சபை என்பது மக்களின் வரிப்பணத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்வது அந்த வகையில் ஏன் அந்த அதிகாரத்தை கல்முனை மக்களுக்கு பிரதி முதல்வராவது வழங்கத் தவறுவது.
குறிப்பாக கடந்த முறை அமர்வுகளை ஒவ்வொரு ஊராக நோக்கும் போது சாய்ந்தமருது மக்களுக்காக சிராஸ், வசீர், முழக்கம் மஜீத், பிர்தவுஸ் இருந்தார்கள் மகிழ்ச்சி.
அதே போன்று மருதமுனை மசூர் மவ்லானா, ரகீப் லோயர் போன்றோர் இருந்து வருகின்றனர் சந்தோஷம்.
அதிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை கூட கடந்த 2 வருடங்கள் பிரதி முதல்வர் கொடுத்து அழகுபடுத்தினர் அதில் முதல் சந்தோஷம் அடைந்தவன் நான்.
இவ்வாறு இருக்கும் இச் சந்தர்பத்தில் நற்பட்டிமுனை மக்களையும் தொடர்ச்சியாக புறக்கணிக்கின்றனர் இந்த முறையாவது அப் பதவியை வழக்குவதற்க்கு ஆளும் கட்சியில் எந்தவொரு நற்பட்டிமுனை மாநகர சபை உறுப்பினர்களும் இல்லை ஆதலால் இம் முறையும் வழங்க முடியாது.
அந்த வகையில் ஆளும் கட்சியில் தற்போது உள்ள மாநகர சபை உறுப்பினர்களில் பல வருடங்களாக மாநகர சபையில் உறுப்பினராக இருக்கும் சீனியர் உறுப்பினர் என்ற வகையில் எந்த விடையம் என்றாலும் அதிலும் கல்முனை மக்களுக்கு சபையில் முதலாவது குறள் கொடுப்பதாயின் கெளரவ மாநகர சபை உறுப்பினர் நிசார்JP மாத்திரமே.
எந்தவித கள்ளம் கபடம் அற்ற, அனைவருடனும் நன்றாக பழக கூடிய, நகைச்சுவை மேடை பேச்சால் மக்களை கவறக் கூடிய, தூர நோக்குடைய, கறைபடியாத கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிசார்JPக்கு ஒரு வருடத்துக்காவது கட்சியினால் பிரதி முதல்வர் கொடுத்து அழகுபடுத்துவது கட்சியின் ஏதிர்காலத்துக்கும், கல்முனை மக்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.
அதே போன்று அவர் பதவிக்கு ஆசைப்பட்டவரல்ல அவரது மாநகர சபை உறுப்பினர் பதவியில் இறுதி 6 மாதத்தை கட்சியின் முக்கியஸ்தர் AB.ஜஃபர் ஹாஜிக்கு வழங்குவதாக ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் தலைவர் மத்தியில் அறிவித்தவர் அவ்வாறன ஒருவருக்கு கட்சியினால் பிரதி முதல்வர் பதவியை வழங்கி அவரையும், கல்முனை மக்களையும் கெளரவபடுத்த வேண்டும்.
ஏனேய விடையங்கள் பாகம் 02யில் அலசப்படும்.
கல்முனை ஜெளஸான்
SLMC கல்முனை 13ம் வட்டார இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment