சாய்ந்தமருதுக்கு எல்லை போட்ட அதாவுல்லவின் அவாசரபுத்தி
Posted by aljazeeralanka.com on February 16, 2020 in Sainthamaruthu | Comments : 0
கதிர் புறக்க வந்தவர்
உப்பட்டியை திருடிவிட்டார்.
+++++++++++++++++++
தனது வங்குரோத்து அரசியலின் ஓட்டை வாக்குச் சாக்கை நிறைக்க அதாவுல்லா நேர்மை, நியாயம், வாக்குறுதி என்பவைகளை மீறி வெறுங்கையால் முளம் அளக்க புறப்பட்டுள்ளார்.
1987 பிரதேச சபை காலம் முதல் 1989 நகரசபை, 2001 மாநகர சபை என கல்முனையின் உள்ளூராட்சி நிர்வாகம் பல பெயர்களில் நிர்வாகிக்கப்பட்டாலும், அதன் தென்புற எல்லை " மாளிகைகாட்டு சந்தியிலிருந்து, காரைதீவு சந்திவரை சென்று சம்மாந்துறை வீதியால் மேற்கு நோக்கி மாவாடிப்பள்ளியை அடைந்து வெட்டை ஆற்றுடன் முடிவடைந்து அங்கிருந்து வடக்கு நோக்கி கிட்டங்கியில் முடிவடைகிறது.
2005ம் ஆண்டு காரைதீவு பிரதேச சபை உருவானபோது 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபை உருவாக்கம் பற்றிய பாராளுமன்ற சட்டத்தை மீறி மாளிகைக்காட்டு சந்தியிலிருந்து பழைய பரடைஸ் ஹொட்டலை ஊடறுத்து வயல்களுக்கு ஊடாக வெட்டைஆற்றை சென்றடைகிறது. இதன் மூலம் குடாகரை கிழக்கு, குடாகரை மேற்கு என சுமார் 600 ஏக்கர் வயல் நிலங்களும், ஏனைய நிலபுலங்களும், அபு அப்துல்லா பள்ளியும்,ஸியாறமும் காரைதீவால் சட்டவிரோதமாக காவுகொள்ளப்பட்டுள்ளது. இது நடைபெறும்போது கல்முனை மாநகர மேயராக ஹரீஸ் அவர்களே இருந்தார்கள். அவரின் கையாலாகாதனத்தால் காரைதீவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கும், கல்முனை மாநகரின் சட்டபூர்வ நிர்வாக நடைமுறைக்கும் தொடர் பிரச்சினை உருவானது.
தற்போது 2020.02.14ல் அவசர அவசரமாக சாய்ந்தமருது நகரசபைக்கு அதாவுல்லாவின் அரசியல் இலாபத்துக்காக வர்த்தமானி வெளியானபோதும், 2005ல் காரைதீவால் சட்டவிரோதமாக போடப்பட் வடக்கு எல்லையே சாயந்தமருது நகரசபையின் தெற்கு எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது காரைதீவின் வடக்கு எல்லை எனும் பிழையான அத்திவாரத்திலிருத்தே சாய்ந்தமருதின் நகரசபை எனும் பிழையான கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது.
அத்திவாரம் பிழை என்றால் அதன் மேலே கட்டப்பட்ட சகலவிதமான கட்டுமானங்களும் பிழையானதே. சட்டத்தின் பார்வையில் காரைதீவு பிரதேச சபையினதும், சாய்ந்தமருது நகரசபையினதும் வர்த்தமானி அறிவித்தல் பிழையானதே.
அத்தோடு ஒரு நிர்வாகத்திற்கு எல்லை நிர்ணயம் செய்வதெனில் பூகோள ரீதியான அடையாளங்களைக் கொண்டே எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். அதாவது, (மலை, ஆறு, வாய்க்கால், பாதை) ஆனால் காரைதீவு பிரதேச சபையினதும், சாய்ந்தமருது நகரசபையினதும் வடபுற, தென்புற ஒரே எல்லையானது பழைய பரடைஸ் ஹொட்டல் முதல் வயல்களை ஊடறுத்து வெட்டை ஆற்றை அடைந்ததும் என பிரசுரித்திருப்பது சட்டரிதீயான எல்லைப்பிரிப்பல்ல.
ஆதலால், இரண்டு சபைகளது வர்த்தமானியும் சட்டரீதியானதல்ல.
கரையோர மாவாட்டம்பற்றி நான் அதாவுல்லாவுடன் ஒரு நாள் பேசியபோது. காணிகள் இல்லாத வெறும் நிர்வாகமாவட்டம் எதற்கு என்று கூறினார்.
அப்படி என்றால், குடாக்கரை கிழகு, குடாகரை மேற்கு ஆகிய 1987முதல் கல்முனை மாநகர நிர்வாகம்வரை ஆண்டு அனுபவித்த 600 ஏக்கர் விவசாய காணிகளையும், பள்ளிவாயல் நில புலம் சகலதையும் கைவிட்டு சாய்ந்தமருதுக்கு எல்லை போட்ட அதாவுல்லிவின் அவாசரபுத்தி அவரின் அரசியல் வாங்குரோத்தை சரிசெய்ய வரலாற்று முக்கியுத்துவம் உள்ள கல்முனையை தமிழர்களிடம் தாரைவார்த்த சதியாகும்.
நோறிச்சோலை வீடுகளை, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய இனரீதியாக ஒரு மாதத்துள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி 80% சிங்களவர்கள், 12% தமிழர்கள், 8% முஸ்லிம்கள் என வீடுகள் வழங்கப்படும்.
வீடுகள் வழங்கியபின் அது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட குடியேற்றம். அதன்பின் , சாய்ந்தமருதுக்கு சபை வழங்கியதைபோல தீகவாபி பிரதேச சபை உருவாக்க அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நொறிச்சோலை குடியேற்றத்தையும், இன்னும் பல பிரதேசங்களையும் சேர்த்து திகவாபி பிரதேச சபை உருவாக்கப்பட உள்ளது.
இதைத்தான் அவதந்திரம் தனக்கந்திரம் என்பது.
அதாவுல்லா அவர்களே!
நீதி மன்றம் சென்று எங்கள் மாநகரின் நிலபுலன்களையும், எல்லைகளையும் பாதுகாக்க அல்லாவின் துணையை நாடியுள்ளோம்.
அல்லாஹ் அவுலியாக்களின் பொருட்டால் உங்களைப்போன்ற முதுகில் குத்தும் துரோகிகளிடமிருந்து எங்கள் கல்முனையை பாதுகாப்பானாக.
நீகள் திருடிய உப்பட்டி, நெல்லா? பதறா? என்பதை காலம் பதில் சொல்லும்.
சத்தியம் வெல்லும், அசத்தியம் அழியும்.
அசத்தியம் அழியக்கூடியதே.
வெற்றி அல்லது வீரசுவர்க்கம்.
ஹாஜி நஸீர்
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment