BREAKING NEWS

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ப‌ல‌ர் முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்ட திருத் தங்கள் தொடர்பில் நீதியமைச்சருக்கு கையளித்துள்ள அறிக் கை

  


முன்மொழியப்பட்டுள்ள விவாக , விவாகரத்து உள்ளடக்கங்கள் இஸ்லாத்துக்கு முரணான விட‌ய‌ங்க‌ளை கொண்டுள்ளது . 


திருமண வயது , ' வொலி ' தொடர்பான சட்டங்கள் , பலதார மணம் , காதிகள் மற்றும் திருமணப் பதிவாளர் நியமனம் , காதி நீதிமன்ற முறைமையில் செய்யப்படுகின்ற மாற்றங்கள் எமது சமூகத்தை எதிர்மறையாக பாதிக்கின்ற மூலக் கூறுகளை கொண்டதாக காணப்படுகிறது . எனவே எமது இறுதியானதும் முடி வானதுமான நிலைப்பாட்டினை நாம் அறிக்கையாக சமர்ப்பித் துள்ளோம் ' என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ப‌ல‌ர் முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்ட திருத் தங்கள் தொடர்பில் நீதியமைச்சருக்கு கையளித்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார்கள் .  


அதன் விப‌ர‌ம் வ‌ருமாறு.


1. காதி நீதிபதிகளாக செயற்படுகின்ற பொறுப்பும் கடமையும் ஆண்க‌ளுக்குரிய‌து என்ற‌ மார்க்க‌ வழிக்காட்டலின்  அடிப்படையில்  மார்க்க அறிஞர்கள் கருத்து தெரி வித்துள்ளனர் என்றும் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர் . குறிப்பிட்ட அறிக்கையில் முஸ்லிம் அமைச்சரொருவரும் , முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவர் ஒரு வரும் கையொப்பமிடவில்லை என அறிக்கை தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் . 


1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட் டத்தில் திருத்தங்கள் மேற்கொள்கின்ற போது பின்பற்றப்பட வேண்டிய பரிந்துரைகளாக பின்வரும் பரிந்துரைகள் பெரும்பாலான‌ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக உடன்பாடு காணப்பட்டுள்ளன . 


01 ) பிரதான சட்டத்தின் தலைப்பி லிருந்து ' Muslim ' என்ற சொல் நீக் கப்பட்டு ' Persons Professing Islam ' என்ற சொற்பிரயோகம் உள்வாங் கப்படக்கூடாது . 


02 ) பிரதான சட்டத்தில் பிரயோகிக்கும் Nikah Ceremony என்ற பிரயோகமானது Solemnizationஎன்ற சொற் பிரயோகத்தினால் மீளமைக்கப்படக்கூடாது . 


03 ) பிரதான சட்டத்தின் பிரிவு 16 நீக்கப்படாமல் தொடர்ந்தும் அவ்வாறே இருத்தல் வேண்டும் .  


04 ) மணமகள் தன்னுடைய சம்மதத்தை வெளிப்படையாகத் தெரி விப்பதற்காக திருமணப்பதிவு ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும் . ஆனால் , இந்த ஏற்பாடானது திருமண ஒப்பந்தத்தின் கட்டாயமான தேவைப்பாடான , திரு மண ஓப்பந்ததாரர்களில் ஒருவ ரான வலியினுடைய கையொப்பம் என்ற தேவைபாட்டினை இல்லாம லாக்கக்கூடாது . 


05 ) திருமணப்பதிவானது கட்டாய மாக்கப்பட வேண்டும் . பதியப்பட வில்லை என்ற காரணத்திற்காக இஸ்லாமியத் திருமணம் 

ஒன்று வலிதற்றதாகாது . ஆனால் ,  திருமணப்பதிவானது ' நிக்காஹ் ' நடக்கின்ற அதே தினத்திலேயே கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் . அவ்வாறு செய்யத்தவ றும் பட்சத்தில் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட வேண்டும் .

 ( இது திருமணப்பதி வினை ஊக்குவிக்க உதவும் ) 

06 ) பெண்களைத் திருமணப்பதி வாளர்களாக நியமிப்பதானது சமூகத்தில் அவர்கள் நீண்ட காலமாகப் பின்பற்றி வருகின்ற பாரம் பரியங்களில் நடைமுறை ரீதியான அசௌகரியங்களை ஏற்படுத்தும் . எனவே , பெண் திருமணப் பதிவா ளர்களை நியமிப்பதை அனுமதிக்க முடியாது . 

07 ) நீதிச்சேவை ஆணைக்குழுவான‌து காதியாக நியமிப்பதற்கு விண்ணப்பிப்பவர்களின் பிராந்தியத்தில் , அவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதன் மூலம் அவருடைய கல்வித்  தகைமைகள் , நன்னடத்தை மேலும் , ஆற்றல் போன்றவற்றைப் பரிசீலித்து பொருத்தமான ஒரு நபரைக்காதியாக நியமிக்க வேண்டும் . 


08 ) ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆகக்குறைந்த திருமண வயதாக 18 வயது நிர்ணயம் செய்யப்படு கின்றபோது , அந்தக் குறித்த பிரிவிற்கு ஒரு விதிவிலக்கு வாசகம் அவசியம் . 


09 ) காதி முறைமையானது தரவி றக்கம் செய்யப்படக்கூடாது . காதிகள் சபை , காதி முறைமையில் இருந்து இல்லாமலாக்கப்படக்கூ டாது . பிரதான சட்டத்தில் காதிகள் மற்றும் காதிகள் சபைக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரங்களும் கட மைகளும் அவ்வாறே தொடர்ந்தும் இருத்தல் வேண்டும் . 

10. பலதாரமணமானது சட்டத்தினால் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் . 


a) பலதாரமணத்திற்கு காதி நீதிபதி வழங்குகின்ற அனுமதியினை அல்லது மறுப்பினை மேன்முறை யீடு செய்கின்ற இடமாக காதிகள் சபை குறிப்பிடப்பட வேண்டும் . ( மாவட்ட நீதிமன்றம் அல்ல ) 


( b ) பலதாரமணம் தொடர்பான குறித்த பிரிவுகளுக்கு மாற்றமாக திருமணம் ஒன்று நிகழுமானால் அது வலிதற்றதாகக் கொள்ளப்படக்கூடாது . ஆனால் , அவ்வாறான இருமணங்களைத் தடுக்கும் வகையில் தண்டனைகளை வகுக்க முடியும் . 



11 ) முஸ்லிம் விவாக விவாகரத் துச் சட்டத்தின் 16 மற்றும் 98 ( 2 ) பிரி வுகளில் உள்ள ' விவாகரத்து ' என்ற வார்த்தையை நீக்கக்கூடாது . 


12 ) பிரதான சட்டத்தின் 30 ஆவது பிரிவு அப்படியே நடைமுறையில் இருக்கும்படி பரிந்துரைக்கிறோம் . எவ்வாறாயினும் , இந்த நடைமுறை நிகழ்வதை ஊக்குவிக்காமல் இருப்பதற்காக ,  நீதிமன்றத்திற்கு வெளியே  விவாகரத்து அறிவிப்பை உச்சரிப்பவருக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கிறோம் . 

13 ) பிரதான சட்டத்தில் காணப்படுகின்ற தலாக் மற்றும் பஸ்ஹ் ஆகிய சொற்பதங்கள் நீக்கப்படக்கூடாது . குலா விவாகரத்து என்பது பிரிவு 28 இல் வரையறுக்கப்பட்டு வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும் . 14 ) மத்தா (நிவார‌ண‌ம்) தொடர்பான பிரிவுகள் சட்டத்தில் உள்வாங்கப்பட  வேண்டும் . மத்தாவைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் காதிக்கு வழங்கப்பட வேண்டும் . அது தொடர்பான மேன்முறையீடு காதிகள் சபைக்குச் செய்யப்பட வேண்டும் . 


15. பிரிவு 74 ஆனது முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது .   


16 ) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து ஆலோசனை சபை இல்லாமலாக்கப்படக்கூடாது . அது  வினைத்திறனாகச் வகையில் செய்யப்பட வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar