BREAKING NEWS

ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தினரையும் அவமதித்தமை , நபிகள் நாயகத்தை அவமதித்தமை போன்ற‌வையே ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம்.

 


ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தினரையும் அவமதித்தமை , நபிகள் நாயகத்தை அவமதித்தமை , திருக்குர்ஆன் எரிக்கப்பட்டமை போன்ற‌ 10 கார‌ண‌ங்க‌ளை கூறியே உயிர்த்த‌ ஞாயிறு தாக்குத‌ல்க‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து என‌ பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ( 22 ) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார் . அவர் மேலும் உரையாற்றியதாவது ,


 2019.04.21 ஞாயிறு ஆம் திகதி உயிர்த்த குண்டுத் தாக்குதலை நடத்த முன்னர் தற்கொலை குண்டுதாரிகள் 2021.04.20 ஆம் திகதி கல்கிஸ்சை பகுதியில் ஒன்றிணைந்து உறுதிப்பிரமாணத்தை பதிவு செய்து தாங்கள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினோம் என்பதற்கான 10  காரணிகளை குறிப்பிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் . 


இலங்கையில் வாழ்ந்த ஏனைய மதத்தவர்கள் அல்லாஹ் கடவுளை அவமதித்தமை , குளியாபிட்டி பகுதியில் பன்றியுடன் ஒன்றிணைத்து அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டமை , ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தினரையும் அவமதித்தமை , நபிகள் நாயகத்தை அவமதித்தமை , திருக்குர்ஆன் எரிக்கப்பட்டமை கிழித்தெறிய‌ப்பட்டமை , பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை , முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை அவர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டமை , முஸ்லிம் பெண்கள் புலனாய்வு விசாரணை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டமை காரணிகளால் தற்கொலை குண்டுதாரிகளாக மாறியதாக குண்டுத் தாக்குதல்தாரிக‌ளாக‌ தாங்கள் மாறியதாக குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்னர் காணொளி வெளியிட்டுள்ளார்கள் . 


காணொளி இறுவட்டை சபைக்கு சமர்ப்பித்துள்ளேன் .


 நியூசிலாந்தில் இடம்பெற்ற   பள்ளிவாசலில் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையிலும் , மேற்குல‌கில் முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு இலங்கையில் விடுமுறையை கழிக்கும் வெளிநாட்டவர்களை  இலக்கு வைத்து தாக்குதலை தாம் தற்கொலை நடத்துவதாகவும் குண்டுதாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள் . 


தாக்குதல்தாரிகள் குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் தமது உறவினர்களுக்கு குரல் பதிவுகளை அனுப்பி கடவுளின் மார்க்கத்துக்கு அமையவே உயிர் , உடல் மற்றும் சொத்துக்களை தாம் தியாகம் செய்வதாகவும்    இதனால் தமது குடும்பத்தாரும் இலங்கையில் வாழும் முஸ்லிம்களும்  ,  பல நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள் என்பதை அறிவோம் . இருப்பினும் கடவுளின் மார்க்கத்தை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar