BREAKING NEWS

தேர்த‌லுக்கென‌ பிரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஒவ்வொரு வ‌ட்டார‌த்திலும் ஒரு ஜும்ஆ ப‌ள்ளி இய‌ங்க‌லாம்

 

புதிதாக‌ ஜும்ஆ ஆர‌ம்பிப்ப‌து ச‌ம்ப‌ந்த‌மான‌ புதிய‌ பொறிமுறை ஆர‌ம்பிக்க‌ப்ப‌டும் என்ற‌ வ‌க்பு ச‌பை, முஸ்லிம் க‌லாசார‌ திணைக்க‌ள‌த்தின் அறிவிப்பு வ‌ர‌வாற்க‌த்த‌க்க‌து என‌ ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.


இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து, 


ஜும்ஆ ப‌ள்ளிக‌ள் ச‌ம்ப‌ந்த‌மாக‌ 1950க்கு முன்புள்ள‌ ச‌ட்ட‌ ந‌டைமுறைக‌ளே இன்னும் உள்ள‌ன‌.  அப்போதிருந்த‌ கிராம‌ங்க‌ள் த‌ற்போது ம‌னித‌ர்க‌ள் பெருகி ந‌க‌ர‌ங்க‌ளாகி விட்ட‌ன‌.


ஒரு கால‌த்தில் 40 பேர் கூட‌ இல்லாம‌ல் இருந்த‌ கிராம‌ங்க‌ள் த‌ற்போது நாலாயிர‌ம் பேர் உள்ள‌தை காண்கிறோம்.


இந்த‌ நிலையில் ஊருக்கு ஒரு ஜும்ஆ ப‌ள்ளி ம‌ட்டுமே இருக்க‌ வேண்டும் என‌ க‌ருதுவ‌து இஸ்லாத்துக்கு முர‌ணான‌து என்ப‌துட‌ன் தொழுகையாளிக‌ளின் உரிமைக‌ளையும் ப‌றிப்ப‌தாகும்.


ப‌ல‌ ஜும்ஆ ப‌ள்ளிக‌ள் இரு மாடிக‌ளாக‌ இருந்தும் ம‌க்க‌ள் வெளியிலும் தொழும் நிலையை காண்கிறோம்.


ஆக‌வே தேர்த‌லுக்கென‌ பிரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஒவ்வொரு வ‌ட்டார‌த்திலும் ஒரு ஜும்ஆ ப‌ள்ளி இய‌ங்க‌லாம் என்ற‌ ப‌ரிந்துரையை ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா முன் வைக்கிற‌து.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar