BREAKING NEWS

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (07) தெரிவித்துள்ளார்

*நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (07) தெரிவித்துள்ளார்.* *நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.* *எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் அந்த நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிடம் உள்ளது என்று முடிவு செய்தோம், நாங்கள் இன்று வரை அந்த ஆதரவை வழங்குகின்றோம்.* *எதிர்காலத்திலும் வழங்குவோம். இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் என பசில் ராஜபக்ச (07) தெரிவித்துள்ளார்.* *இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைமைத்துவத்துடன் மக்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.* ...

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar